Search This Blog

Saturday, January 17, 2015

Papaya-Soup

#பப்பாளிக்காய்சூப் : பப்பாளி காயாக இருக்கும் போது அதில் நோயை எதிர்க்கவல்ல என்சைம்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. பழமாக மாறும் போது இந்த என்சைம்களின் வீரியமும் அளவும் குறைந்து விடுகிறது. இந்த #பப்பாளிக்காய் உணவு செரிமானத்திற்கும் மலச்சிக்கல் வராமல் தவிர்ப்பதற்கும் மிக மிக உதவியாக இருக்கிறது.
காயை எப்படி சாப்பிடுவது என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது!!
சுரைக்காய், சௌ சௌ, பூசணிக்காய் போல இதனையும் சாம்பார், கூட்டு, மற்றும் மோர் குழம்பு ஆகியவை செய்யலாம். பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.
இங்கு பப்பாளி காய் உபயோகித்து சூப் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

பப்பாளிக்காய் சூப்


தேவையான பொருட்கள் :
1/2 கப்பப்பாளிக்காய் பொடியாக அரிந்தது
1 Tbspவெங்காயம் பொடியாக அரிந்தது
1 tspபூண்டு பொடியாக அரிந்தது
1/2 tspகொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது
1 1/2 Tbspபாப்பரை மாவு*
1/2 tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 tspமிளகுப்பொடி
1/2 tspகாய்ந்த புதினா இலைகள் [ இருந்தால் ]

*பாப்பரை மாவு இல்லையென்றால் ஓட்ஸ் அல்லது சோளமாவு உபயோகிக்கலாம்.

செய்முறை :

  • ஒரு கிண்ணத்தில் 1 1/4 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
  • மிதமான தீயில் சூடாக்கவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பூண்டு மற்றும் பப்பாளிகாயை சேர்க்கவும்.
  • தீயை குறைத்து பப்பாளிக்காய் வேகும் வரை அடுப்பில் சூடாக்கவும்.
  • பப்பாளிக்காய் வெந்தவுடன் பாப்பரை மாவை ஒரு சிறு கிண்ணத்தில் 1/4 கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  • சூப் பளபளப்பாக மாறி கஞ்சி பதத்தை அடைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
  • சூப் அருந்தும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி புதினா மற்றும் மிளகுப்பொடி தூவி பரிமாறவும்.
  • ஆஹா!! அருமையான பப்பாளிக்காய் சூப் தயார்!! சூடாக அருந்தி மகிழவும்!!

பப்பாளிக்காய் சூப்

குளிர்காலத்தில் மாலை வேளையில் அருந்துவதற்கு ஏற்ற பானம் ஆகும்.
செய்து பாருங்களேன்!! இதன் சுவை உங்களை மறு முறையும் செய்ய தூண்டும்!!





மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்





No comments:

Post a Comment