#மாங்காய்காரசட்னி : #மாங்காய் உபயோகித்து மற்றுமொரு சட்னி. முன்பு பதிவிட்ட அனைத்து சட்னியிலும் மாங்காயுடன் தேங்காய் துருவலை சேர்த்துதான் சட்னி செய்துள்ளேன். இந்த முறை மாங்காய் மட்டுமே உபயோகித்து ஒரு சட்னி முயற்சி செய்தேன்.வெகு சமீபத்தில் தொலை காட்சியில் ரேவதி சண்முகம் அவர்கள் செய்து காட்டிய முறையை ஒட்டி இருக்கும். ஆனால் நான் மேலும் சில பொருட்களையும் புதினாவையும் கூடுதலாக சேர்த்து செய்துள்ளேன்.
இனி சட்னி செய்முறையை காண்போம்.
இனி சட்னி செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
3/4 கப் | மாங்காய் துருவியது |
3 or 4 | சிகப்பு மிளகாய் |
3 or 4 | பச்சை மிளகாய் |
1 Tsp | கடுகு |
1 1/2 Tsp | உளுத்தம் பருப்பு |
2 Tsp | கடலை பருப்பு |
1/2 Tsp | கொத்தமல்லி விதை |
1/4 Tsp | பெருங்காய தூள் |
20 - 25 | புதினா இலைகள் |
1 Tsp | எண்ணெய் |
1 Tsp | உப்பு [ adjust ] |
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சேர்க்கவும்.
சாரணியால் திராவி விட்டுக்கொண்டே இருக்கவும்.
பருப்பு இலேசாக நிறம் மாறியதும் கொத்தமல்லி விதை மற்றும் பெருங்காய தூளை சேர்த்து வறுக்கவும்.
பொன்னிறமாக வறுபட்டவுடன் சிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும்.
மிளகாயை இலேசாக வறுத்தால் போதுமானது.
மிளகாயை இலேசாக வறுத்தால் போதுமானது.
அடுப்பை அணைத்து விட்டு வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் துருவிய மாங்காயை சேர்த்து இருக்கும் சூட்டில் வதக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்த்த பின்னர் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பொங்கல், & இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பொங்கல், & இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment