#வாழைப்பூமிளகுகுழம்பு : பொதுவாக வாழைப்பூ இருந்தால் வாழைப்பூ பருப்பு உசிலி தான் செய்வது என் வழக்கம். இப்போது நான் வசிக்கும் ஹூப்ளியில் மிகவும் அரிதாகத்தான் வாழைப்பூ கிடைக்கும். அதனால் சென்ற வாரம் சந்தையில் வாழைப்பூவை பார்த்ததும் 3 பூக்கள் வாங்கி வந்து விட்டேன். ஆகவே புது முயற்சி செய்து பார்த்துதான் அதனை தீர்க்க வேண்டிய கட்டாயம். முன்பு ஒரு முறை சிறிது வித்தியாசமாக வாழைப்பூ குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. சாதத்திற்கு மட்டுமல்லாமல் தோசை இட்லிக்கும் தொட்டுக்கொள்ள அருமையான குழம்பாக அமைந்தது. அதே போல மிளகு குழம்பு செய்வது போல அரைத்து வாழைப்பூவை சேர்த்து குழம்பு செய்யலாம் என முடிவு செய்தேன். இரண்டு நாட்களுக்கு முன் செய்தும் பார்த்தேன். மிக மிக சுவையாக இருந்தது. அதனை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
கோலிகுண்டு அளவு | புளி, சுடு நீரில் ஊறவைக்கவும் |
1/2 கப் | வாழைப்பூ நறுக்கியது |
1 | வெங்காயம் நீளவாக்கில் அரிந்தது |
8 - 10 | கறுவேப்பிலை இலைகள் |
1 Tbsp | காரட் அரிந்தது [ optional ] |
2 Tsp | அரைத்துவிட்ட குழம்பு பொடி |
1/8 Tsp | மஞ்சத்தூள் |
1 Tsp | உப்பு [ adjust ] |
2 Tbsp | நல்லெண்ணெய் [ preferred ] |
1/2 Tsp | கடுகு |
அரைக்க : | |
1 Tsp | மிளகு |
1 Tsp | சீரகம் |
1/2 Tsp | சீரகத்தூள் |
1/4 Tsp | மல்லி விதைகள் |
25 - 30 | கறுவேப்பிலை |
1 சிறிய அளவு | வெங்காயம், வெட்டி வைக்கவும் |
1 மத்திய அளவு | தக்காளி, நான்காக பிளந்து வைக்கவும் |
3 Tsp | தேங்காய் துருவல் |
2 Tsp | நல்லெண்ணெய் [ preferred ] |
தாளிக்க : | |
1 Tsp | சீரகம் |
6 - 8 | கறுவேப்பிலை |
1 Tsp | நல்லெண்ணெய் [ preferred ] |
செய்முறை :
வாழைப்பூவின் நடு காம்பை அகற்றி விட்டு பொடியாக அரிந்து மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
குழம்பு மசாலா அரைக்க :
குழம்பு மசாலா அரைக்க :
அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மிளகு சேர்த்து பொரிந்து வறுத்து எடுக்கவும்.
அடுத்து சீரகத்தை சேர்த்து பொரிந்து வந்தவுடன் எடுத்து விடவும்.
பிறகு மல்லி விதைகளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில் கருவேப்பிலையை சேர்த்து நிறம் மாறாமல் கலகலவென வரும் வரை வறுத்து எடுக்கவும்.
இப்போது மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்.
கடைசியாக தக்காளியை வதக்கி எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து இருக்கும் சூட்டில் வதக்கி எடுக்கவும்.
வறுத்த மற்றும் வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு சீரகத்தூள் சேர்த்து அரைக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுத்து தனியாக வைக்கவும்.
மிக்ஸி பாத்திரத்தை சிறிது தண்ணீர் விட்டு கழுவி அதையும் அரைத்து வைத்துள்ள விழுதோடு சேர்த்து தனியே வைக்கவும்.
குழம்பு தயாரிக்க :
அடுப்பில் அதே வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வந்தவுடன் மஞ்சத்தூள் சேர்த்து வெட்டி வைத்துள்ள வாழைப்பூவை சரத்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அரிது வைத்துள்ள விழுது, அரைத்துவிட்ட குழம்பு பொடி, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் ஒன்றாக சேர்த்து வரும் வரை கொதித்தால் போதும்.
கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம் வெடிக்க விட்டு கருவேப்பிலையை கையால் கிழித்து போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை மிளகு குழம்பின் மேல் ஊற்றவும்.
வாழைப்பூ மிளகு குழம்பு பருப்பு சாதம் மற்றும் பொடி கலந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உகந்த அருமையான சுவையுடைய குழம்பாகும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிடவும் ஏற்ற குழம்பாகும்.
இட்லி, தோசை மற்று சப்பாத்தியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
சீரக சாதம் மற்றும் புலாவுடனும் சாப்பிட ஏற்றதாகும்.
மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
பல விதவிதமான சமையல் செய்முறைகள்
அடுப்பில் அதே வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வந்தவுடன் மஞ்சத்தூள் சேர்த்து வெட்டி வைத்துள்ள வாழைப்பூவை சரத்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அரிது வைத்துள்ள விழுது, அரைத்துவிட்ட குழம்பு பொடி, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் ஒன்றாக சேர்த்து வரும் வரை கொதித்தால் போதும்.
கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம் வெடிக்க விட்டு கருவேப்பிலையை கையால் கிழித்து போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை மிளகு குழம்பின் மேல் ஊற்றவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிடவும் ஏற்ற குழம்பாகும்.
இட்லி, தோசை மற்று சப்பாத்தியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
சீரக சாதம் மற்றும் புலாவுடனும் சாப்பிட ஏற்றதாகும்.
மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment