Search This Blog

Showing posts with label vazhaipoo. Show all posts
Showing posts with label vazhaipoo. Show all posts

Thursday, September 15, 2016

Vazhaipoo-Mullangi-Poriyal

#வாழைப்பூமுள்ளங்கிபொரியல் : அறுசுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவையுடைய வாழைப்பூவை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலர் தவிர்த்து விடுகின்றனர். பருப்பு உசிலி செய்தால் அதன் சுவை சிறிது மட்டுப்படும். ஆனால் பருப்பு உசிலி செய்ய கூடுதல் நேரம் செலவாகும். இதனை மனதில் கொண்டு சில சுவை மிகுந்த காய்கறிகளான கேரட், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி போன்றவற்றுடன் வாழைப்பூவை சேர்த்து பொரியல் செய்து சுவைக்க ஆரம்பித்து விட்டேன். இதனால் இரு வேறு வகையான காய்கறிகளின் சத்தும் சுவையும் ஒருசேர நமக்கு கிடைக்கிறது.
இங்கு வாழைப்பூ, முள்ளங்கி மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றை உபயோகித்து பொரியல் செய்வதெப்படி என காணலாம்.

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்

தேவையானவை :
1/2 கப்வாழைப்பூ நறுக்கியது
3/4 கப்முள்ளங்கி துருவியது
1/8 கப்பயத்தம் பருப்பு
2 Tspகுடை மிளகாய் [ இருந்தால் ]
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கருவேப்பிலை [ விரும்பினால் ]
2பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
3/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி தழை

செய்முறை :
பொரியல் செய்ய துவங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பயத்தம் பருப்பை எடுத்து கழுவிய பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு முள்ளங்கி துருவலை சேர்த்து உப்பு போட்டு கலந்து தனியே வைக்கவும்.
முள்ளங்கியுடன் உப்புடன் சேர்த்து கலந்து வைத்திருப்பதால் நீர் விட ஆரம்பிக்கும்.
இந்த நீரில் பயத்தம் பருப்பு ஊறி விடும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பின் மீது வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு சேர்த்து வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்.
 அடுத்து கருவேப்பிலை மற்றும் நீளமாக கீறிய பச்சை மிளகாய் போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து வெங்காயம் வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து வெட்டி வைத்துள்ள குடை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் அதற்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட்ட பின் முள்ளங்கியை சிறிது கையால் பிழிந்து விட்ட பின் சேர்க்கவும்.
நன்கு கிளறி விட்ட பின்னர் ஒரு மூடி போட்டு மூடி  தீயின் மீது வேக விடவும்.

ஐந்து நிமிடங்களுக்குள்  வாழைப்பூவும் முள்ளங்கியும் வெந்து விடும்.
உப்பு சரி பார்த்த பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு உகந்த பொரியல் ஆகும்.

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Wednesday, July 27, 2016

Vazhaipoo-Vazhaithandu-Thayir-Pachadi

வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி : #வாழைப்பூ துவர்ப்பு சுவையுடையது. அதன் இதழ்களை பிரித்து உள்ளே உள்ள பூக்களை சமைக்க பயன்படுத்தி வருகிறோம். உள்ளே செல்ல செல்ல இதழ்களும் மென்மையாகவும் இளசாகவும் இருப்பதை காணலாம். ஒவ்வொரு பூவிலும் இருக்கும் காம்பும் மென்மையாக இருப்பதையும் காணலாம். பூவின் நடுப்பகுதியில் [ உள் பகுதி ] உள்ளவற்றை  வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடலாம். துவர்ப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.
பச்சையாக சாப்பிடக் கூடிய உள்பகுதி வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், துருவிய கேரட் மற்றும் வெங்காயம் கொண்டு செய்யப்படும் சுவையான தயிர் பச்சடி பற்றி இங்கு காண்போம்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்தயிர்
உள்பகுதிவாழைப்பூ
2 Tbspவாழைத்தண்டு நறுக்கியது
2 Tbspவெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது
1 Tbspவெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tspகாரட் துருவியது
6 - 8கறிவேப்பிலை இலைகள்
1 Tspகொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை அடித்து வைக்கவும்.
அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
வெடித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கலக்கி வைத்துள்ள தயிர் பச்சடியின் மேல் கொட்டவும்.
சுவையான தயிர் பச்சடி தயார்.
பருப்பு சாதம், புலாவ், பிரியாணி, பிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
செய்து சுவைத்து பார்க்கவும்.






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி






Tuesday, March 29, 2016

Beetroot-Vazhaipoo-Poriyal

#பீட்ரூட்வாழைப்பூபொரியல் : #வாழைப்பூ #துவர்ப்பு சுவையுடையது என நாம் அனைவரும் அறிவோம். அறுசுவைகளில் ஒரு சுவையான துவர்ப்பு சுவை நமது உணவில் இடம் பெறுவது மிகவும் அத்தியாவசியமாகும். வாழைப்பூ துவட்டல் செய்தால் அதன் சுவை காரணமாகவே பலரும் சாப்பிட விருப்பபட மாட்டார்கள். அதன் சுவையை மட்டுபடுத்த பருப்பு உசிலி செய்தால் சுவைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் பருப்பு உசிலி செய்ய சிறிது அதிக நேரம் தேவை.  அதனால் பிற காய்கறிகளுடன் வழைப்பூவை சேர்த்து பொரியல் செய்தால் சுவை மிக மிக அபாரமாக இருக்கும். எல்லோரும் விரும்பி உண்ணும் படியாகவும் இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு வாழைப்பூ, பீட்ரூட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து  பொரியல் செய்து பார்த்தேன். சுவை மிக மிக அருமையாக இருந்தது.

பீட்ரூட் வாழைப்பூ பொரியல்


தேவையான பொருட்கள் :
1/2 கப்வாழைப்பூ பொடியாக நறுக்கியது
3/4 கப்பீட்ரூட் துருவியது
3 Tspகுடை மிளகாய் பொடியாக நறுக்கியது
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கறுவேப்பிலை [ optional ]
1 Tspசாம்பார் பொடி
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி தழை

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர்  உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து கறுவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய பிறகுகுடைமிளகாயை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
அடுத்து  சாம்பார் பொடி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது துருவிய பீட்ரூட் மற்றும் வாழைப்பூவை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி பீட்ரூட் மற்றும் வாழைப்பூ வேகும் வரை அடுப்பின் மேல் சிறிய தீயில் வேக விடவும்.
வெந்ததும் மூடியை எடுத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு தயாரித்த பொரியலை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




பீட்ரூட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் வாழைப்பூ பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Sunday, June 7, 2015

Vazhaipoo-Milagu-Kuzhambu

#வாழைப்பூமிளகுகுழம்பு : பொதுவாக வாழைப்பூ இருந்தால் வாழைப்பூ  பருப்பு உசிலி தான் செய்வது என் வழக்கம்.  இப்போது நான் வசிக்கும் ஹூப்ளியில் மிகவும் அரிதாகத்தான் வாழைப்பூ கிடைக்கும். அதனால் சென்ற வாரம் சந்தையில் வாழைப்பூவை பார்த்ததும் 3 பூக்கள் வாங்கி வந்து விட்டேன். ஆகவே புது முயற்சி செய்து பார்த்துதான் அதனை தீர்க்க வேண்டிய கட்டாயம். முன்பு ஒரு முறை சிறிது வித்தியாசமாக வாழைப்பூ குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. சாதத்திற்கு மட்டுமல்லாமல் தோசை இட்லிக்கும் தொட்டுக்கொள்ள அருமையான குழம்பாக அமைந்தது. அதே போல மிளகு குழம்பு செய்வது போல அரைத்து வாழைப்பூவை சேர்த்து குழம்பு செய்யலாம் என முடிவு செய்தேன். இரண்டு நாட்களுக்கு முன் செய்தும் பார்த்தேன். மிக மிக சுவையாக இருந்தது. அதனை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


வாழைப்பூ மிளகு குழம்பு


தேவையான பொருட்கள் :
கோலிகுண்டு அளவுபுளி, சுடு நீரில் ஊறவைக்கவும்
1/2 கப்வாழைப்பூ நறுக்கியது
1வெங்காயம் நீளவாக்கில் அரிந்தது
8 - 10கறுவேப்பிலை இலைகள்
1 Tbspகாரட் அரிந்தது [ optional ]
2 Tspஅரைத்துவிட்ட குழம்பு பொடி
1/8 Tspமஞ்சத்தூள்
1 Tspஉப்பு [ adjust ]
2 Tbspநல்லெண்ணெய் [ preferred ]
1/2 Tspகடுகு
அரைக்க :
1 Tspமிளகு
1 Tspசீரகம்
1/2 Tspசீரகத்தூள்
1/4 Tspமல்லி விதைகள்
25 - 30கறுவேப்பிலை
1 சிறிய அளவுவெங்காயம், வெட்டி வைக்கவும்
1 மத்திய அளவுதக்காளி, நான்காக பிளந்து வைக்கவும்
3 Tspதேங்காய் துருவல்
2 Tspநல்லெண்ணெய் [ preferred ]
தாளிக்க :
1 Tspசீரகம்
6 - 8கறுவேப்பிலை
1 Tspநல்லெண்ணெய் [ preferred ]

செய்முறை :
வாழைப்பூவின் நடு காம்பை அகற்றி விட்டு பொடியாக அரிந்து மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
குழம்பு மசாலா அரைக்க :
அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மிளகு சேர்த்து பொரிந்து   வறுத்து எடுக்கவும்.
அடுத்து சீரகத்தை சேர்த்து பொரிந்து வந்தவுடன் எடுத்து விடவும்.
பிறகு மல்லி விதைகளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில் கருவேப்பிலையை சேர்த்து நிறம் மாறாமல் கலகலவென வரும் வரை வறுத்து எடுக்கவும்.
இப்போது மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்.
கடைசியாக தக்காளியை வதக்கி எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து இருக்கும் சூட்டில் வதக்கி எடுக்கவும்.
வறுத்த மற்றும் வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு சீரகத்தூள் சேர்த்து அரைக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுத்து தனியாக வைக்கவும்.
மிக்ஸி பாத்திரத்தை சிறிது தண்ணீர் விட்டு கழுவி அதையும் அரைத்து வைத்துள்ள விழுதோடு சேர்த்து தனியே வைக்கவும்.
குழம்பு தயாரிக்க :
அடுப்பில் அதே வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வந்தவுடன் மஞ்சத்தூள் சேர்த்து வெட்டி வைத்துள்ள வாழைப்பூவை சரத்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அரிது வைத்துள்ள விழுது, அரைத்துவிட்ட குழம்பு பொடி, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் ஒன்றாக சேர்த்து வரும் வரை கொதித்தால் போதும்.
கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம் வெடிக்க விட்டு கருவேப்பிலையை கையால் கிழித்து போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை மிளகு குழம்பின் மேல் ஊற்றவும்.
வாழைப்பூ மிளகு குழம்பு பருப்பு சாதம் மற்றும் பொடி கலந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உகந்த அருமையான சுவையுடைய குழம்பாகும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிடவும் ஏற்ற குழம்பாகும்.
இட்லி, தோசை மற்று சப்பாத்தியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
சீரக சாதம் மற்றும்  புலாவுடனும் சாப்பிட ஏற்றதாகும்.





மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க


மிளகு குழம்பு
மிளகு குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ விரல்கள்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி புலாவ்
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர்குழம்பு



பல விதவிதமான சமையல் செய்முறைகள்