Search This Blog

Sunday, April 6, 2014

Kuthiraivaali Vazhaipoo Pulav

#குதிரைவாலிவாழைப்பூபுலாவ் : இந்த வாரம் #வாழைப்பூ வாரம். ஏனெனில் சென்னையிலிருந்து மூன்று பூக்கள் வாங்கி வந்துள்ளேன். அதனால் அதனை கொண்டு எல்லா வகையான உணவையும் செய்து சுவைக்க வேண்டியதுதான்!! இங்கு ராய்ப்பூரில் எப்போதாவது வாழைப்பூ கிடைக்கும். ஆனால் வாழைப்பூவிற்கு உண்டான துவர்ப்பின்றி கசப்பாக இருப்பதனால் வாங்குவதில்லை.
சுவைகள் ஆறு வகையாகும். அதில் துவர்ப்பிற்கு ஒரே எடுத்துக்காட்டு வாழைப்பூ ஆகும். துவர்ப்பு சுவை கூடிய உணவையும் தினப்படி எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
துவட்டல், பொரியல், தயிர் பச்சடி, வடை, ஆவியில் வேக வைத்த உருண்டை ஆகியவற்றை செய்து முடித்து விட்டேன். அதனால் இன்று கொத்தமல்லி தழையுடன் குதிரைவாலி அரிசியில்  புலாவ் செய்து பார்த்தேன். சுவையாகத்தான் இருந்தது.

குதிரைவாலி அரிசியை பற்றி சில குறிப்புகள் :
English                               : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet 
To know on Millets
இனி எப்படி என்று பார்ப்போம்.

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்


தேவையான பொருட்கள் :


1/2 கப்                                                 குதிரைவாலி அரிசி
1 சிறிய கட்டு                                  கொத்தமல்லி, பொடியாக நறுக்கவும்
20 - 25                                                  வாழை பூக்கள், பொடியாக நறுக்கவும்
1                                                           தக்காளி, பொடியாக நறுக்கவும்
1                                                           வெங்காயம், நீல வாக்கில் நறுக்கவும்
6 - 7                                                      சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
6 - 7                                                      பூண்டு, பொடியாக நறுக்கவும்
1                                                            பச்சை மிளகாய், இரண்டாக கீரிகொள்ளவும்

1/2 Tsp                                                   சீரகத்தூள்
1/4 Tsp                                                   மிளகாய் தூள்

2                                                            ஏலக்காய்
3                                                            கிராம்பு

1 அங்குல துண்டு                          பட்டை
1                                                            பிரிஞ்சி இலை
1/2 Tsp                                                  சீரகம்
1/2 Tsp                                                  பெருஞ்சீரகம்
3 Tsp                                                     நல்லெண்ணெய்
1 tsp                                                      நெய்

செய்முறை :
குதிரைவாலி அரிசியை கல் நீக்கி கழுவி ஊற வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 3 Tsp எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகம், பெருஞ்சீரகம், ஏலக்காய், பட்டை கிராம்பு மற்றும் பிரிஞ்சி இல்லை தாளித்து பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

இப்போது வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளியை சேர்க்கவும்.
இப்போது மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து வதக்கவும்.

இந்த தருணத்தில் அரிசியிலிருந்து  தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
நெய்யை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
குதிரைவாலி அரிசி நல்ல வெள்ளை நிறத்திற்கு மாறியவுடன்
கடைசியாக வாழைப்பூவை நறுக்கி சேர்க்கவும்.

1 கப் தண்ணீர், 3/4 Tsp உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
மூடி வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

பிறகு சிறிய தீயில் 3 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி முழுவதுமாக அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.
சாரணியால் மசித்து விடாமல் மென்மையாக கிளறி விடவும்.

சூடாக தட்டில் பரிமாறி தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :
குதிரைவாலி கொத்தமல்லி சாதம் வரகரிசி தக்காளி சாதம் குதிரைவாலி புளியோதரை வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்





No comments:

Post a Comment