#பிரண்டைதுவையல் : #பிரண்டை யை பொதுவாக தோட்டத்து வேலிகளில் படர்ந்திருப்பதை காணலாம். இதை ஆங்கிலத்தில் Adament creeper / Devils' back bone / Veldt Grape என அறியப்படுகிறது. பிரண்டை கணுக்களை கொண்டதாகவும், வேலிகளில் படருவதற்காக பற்றிக்கொள்ள ஏதுவாக நரம்புகளை உடையதாகவும் இருக்கிறது.
அப்பளம் செய்வதற்கு பிரண்டை பயன் படுத்தப்படுகிறது. இதை தவிர துவையல் அரைக்கவும் செய்யலாம். இளையதாக உள்ள நுனி பகுதி துவையல் அரைக்க ஏதுவாக இருக்கும். நன்கு கழுவிய பிறகு கணு பகுதியை உடைத்து நான்கு பகுதியிலும் நரம்பை நீக்க வேண்டும்.
இனி துவையல் செய்யும் முறையை காண்போம்.
செய்முறை :

தேவையான பொருட்கள் : | |
---|---|
ஒரு கைப்பிடி | பிரண்டை |
2 - 3 | சிகப்பு மிளகாய் |
1 Tsp | உளுத்தம் பருப்பு |
1 Tsp | கடலை பருப்பு |
3 Tsp | நிலக்கடலை |
1/2 Tsp | ஆளி விதை |
1 Tsp | இஞ்சி துண்டுகள் [ விரும்பினால் ] |
4 -5 | மிளகு |
1/4 Tsp | கொத்தமல்லி விதை |
2 Tsp | எலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ] |
1 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
2 Tsp | நல்லெண்ணெய் |
செய்முறை :
நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, நிலகடலை ஆகியவற்றை சிவக்கும் வரை வறுக்கவும்.
இலேசாக சிவக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லி விதை, மிளகு மற்றும் ஆளி விதிகளை சேர்த்து படபடவென ஆளி விதை பொறியும் வரை வறுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அல்லது மிக்ஸி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி துண்டுகளை நன்கு சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.
மேலும் சிறிது எண்ணெய் விட்டு பிரண்டை துண்டுகளை வதக்கவும்.
பிரண்டையை நன்கு வதக்குவது மிகவும் அவசியம்.
இல்லையெனில் தொண்டையில் அரிப்பெடுக்கும்.
இவையனைத்தையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி துவையல் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் மற்றும் அரிசி சுண்டல் போன்ற சிற்றுண்டிகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
சட்னி வகைகள்
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
- படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
சட்னி வகைகள்
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment