Search This Blog

Showing posts with label pachadi. Show all posts
Showing posts with label pachadi. Show all posts

Wednesday, July 27, 2016

Vazhaipoo-Vazhaithandu-Thayir-Pachadi

வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி : #வாழைப்பூ துவர்ப்பு சுவையுடையது. அதன் இதழ்களை பிரித்து உள்ளே உள்ள பூக்களை சமைக்க பயன்படுத்தி வருகிறோம். உள்ளே செல்ல செல்ல இதழ்களும் மென்மையாகவும் இளசாகவும் இருப்பதை காணலாம். ஒவ்வொரு பூவிலும் இருக்கும் காம்பும் மென்மையாக இருப்பதையும் காணலாம். பூவின் நடுப்பகுதியில் [ உள் பகுதி ] உள்ளவற்றை  வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடலாம். துவர்ப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.
பச்சையாக சாப்பிடக் கூடிய உள்பகுதி வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், துருவிய கேரட் மற்றும் வெங்காயம் கொண்டு செய்யப்படும் சுவையான தயிர் பச்சடி பற்றி இங்கு காண்போம்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்தயிர்
உள்பகுதிவாழைப்பூ
2 Tbspவாழைத்தண்டு நறுக்கியது
2 Tbspவெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது
1 Tbspவெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tspகாரட் துருவியது
6 - 8கறிவேப்பிலை இலைகள்
1 Tspகொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை அடித்து வைக்கவும்.
அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
வெடித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கலக்கி வைத்துள்ள தயிர் பச்சடியின் மேல் கொட்டவும்.
சுவையான தயிர் பச்சடி தயார்.
பருப்பு சாதம், புலாவ், பிரியாணி, பிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
செய்து சுவைத்து பார்க்கவும்.






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி






Monday, February 16, 2015

Thayir-Nellikkai - Amla-in-Curd

#தயிர்நெல்லிக்காய் : #நெல்லிக்காய் வைட்டமின் C அதிகமாக நிறைந்துள்ள ஒரு அருமையான கனியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரும்பு சத்தை உடலில் சேர்க்கவும் இந்த வைட்டமின் C மிகவும் அவசியம் ஆகும். நம் அன்றாட உணவில் நெல்லிக்கனியை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான வைட்டமின் C  கிடைக்கப் பெறலாம்.
இதுவரை நெல்லிக்காயை  உபயோகித்து பலவிதமான சட்னி செய்யும் முறைகளை அறிந்து கொண்டோம். இங்கு நெல்லிக்காயை தயிரில் கலந்து செய்யப்படும் தயிர் நெல்லிக்காய் செய்யும் முறையை காண்போம்.

தயிர் நெல்லிக்காய்

தேவையான பொருட்கள் :
3 or 4நெல்லிக்காய் [ gooseberry ]
1 கப்தயிர் 
a pinchமஞ்சத்தூள்
1/4 Tspமிளகாய் தூள் [ விரும்பினால் ]
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
1/4 Tspபெருங்காய தூள்
6 or 7கறுவேப்பிலை
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
2 Tspநல்லெண்ணெய் 

செய்முறை :
நெல்லிக்காயை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி வைக்கவும்.
இட்லி பானையிலோ அல்லது குக்கரிலோ ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
குக்கரில் ஆவியில் வேக வைக்கும் போது மூடியின் மீது வெயிட் பொருத்த வேண்டாம்.
ஆவியில் வேக வைத்த நெல்லிக்காயை வெளியில் எடுத்து கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு சுத்தமான கண்ணாடி கிண்ணத்தில் தயிருடன் பெருங்கயத்தூள் சேர்த்து தேக்கரண்டியால் அடித்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை மிதமான தணலில் வைத்து சூடாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெடிக்க விட்ட பின்னர் வெந்தயம் சேர்த்து உடனேயே பச்சை மிளகாய் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும்.
இதனை கிண்ணத்தில் உள்ள தயிருடன் சேர்க்கவும்.
அதே வாணலியில் மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நெல்லிக்காய் துண்டுகள், மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதக்கியதை தயிருடன் சேர்க்கவும்..
தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பிறகு உண்ண ஆரம்பிக்கலாம்.
குளிர் சாதனப்பெட்டியில் இரண்டு மூன்று நாட்களுக்கு பத்திரப்படுத்தி உண்ணலாம்.

Thayir Nellikkai [ Gooseberry in curd ]

அப்படியே சும்மாவும் சாப்பிடலாம்.
பருப்பு சாதம் மற்றும் சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் தூள் அளவை அவரவர் சுவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
தயிர் புளிக்காத தயிராக இருந்தால் சுவை அருமையாக இருக்கும்.



சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய்
சட்னி


சிறுதானியங்கள் சமையல் செய்முறைகள்











Saturday, April 26, 2014

Vazhai Thandu Thayir Pachadi

#வாழைத்தண்டுதயிர்பச்சடி :  #வாழைத்தண்டு உடலுக்கு மிக மிக நல்லது. சிறுநீரக கல்லையே கரைக்கக்கூடிய தன்மை உடையது. நார் சத்தும் தண்ணீர் சத்தும் அதிகமாகக் கொண்டதாகும். வாழைத்தண்டு பொரியல்தான் இதனை கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். தற்போது வாழை தண்டு ஜூஸ் மிக பிரபலமாக உள்ளது.
இந்த வாழை தண்டை உபயோகித்து தயிர் பச்சடி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

வாழைத்தண்டு தயிர்பச்சடி

தேவையான பொருட்கள் :
4 Tsp                                     வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது
1 Tsp                                     காரட் துருவியது
2 Tsp                                     வெங்காயம் பொடியாக அரிந்தது
1 Tsp                                    கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1                                            பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
10                                          கறுவேப்பிலை
1/2 கப்                                 தயிர்
1/2 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1/2 Tsp                                 கடுகு
1 Tsp                                    உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                 எண்ணெய்

செய்முறை :
எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலக்கவும்.


தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 1/2 Tsp எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பச்சடியின் மேலே கொட்டவும்.

வாழைத்தண்டு தயிர்பச்சடி

புலாவ்பிரியாணிபிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான பச்சடி.






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி