#வாழைப்பூவிரல்கள் [ #வாழைப்பூபஜ்ஜி ] : #வாழைப்பூ வை உபயோகித்து செய்த ஒரு மாலை நேர #சிற்றுண்டி. காபி பருகும் போது சுவைக்க ஏற்ற உணவு.
நேற்று இட்லி மாவு அரைக்கும் போது அப்படியே மாலையில் சுவைக்க என்ன செய்யலாம் என யோசித்த போது உருவாகிய உணவு இது.
இனி எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் உளுந்து மாவு [ இட்லி மாவு அரைக்கும் போது எடுத்துகொள்ளவும் ]
1Tbsp அரிசி மாவு
1/4 Tsp மிளகு உடைத்தது
!/4 Tsp கருஞ்சீரகம்
1/8 Tsp ஓமம்
1/4 Tsp உப்பு
10 - 12 வாழைப்பூ ஆர்குகள்
தேவையான எண்ணெய்
செய்முறை :
வாணலியை மிதமான தீயில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு வாயகல பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் விடாமல் பிசையவும்.
எண்ணெய் சூடானதும் வாழைப்பூவை மாவினில் தோய்த்து மெதுவாக எண்ணெயில் விடவும்.
ஒரு முறைக்கு 5 அல்லது 6 வாழைப்பூவை மாவில் நனைத்து போட்டு பொரிக்கவும்.
சாரணியினால் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தட்டின் மேல் எண்ணெய் உறிஞ்சும் தாளை பரப்பி அதன் மேல் பொரித்தவற்றை எடுத்து வைக்கவும்.
சூடாக இருக்கும் போதே உண்டு மகிழவும்.
காபியுடன் சுவைக்க அருமையான ஒரு பலகாரம்.
எங்க கிளம்பிட்டீங்க!! வாழைப்பூ விரல்களை செய்யவா??!!...
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

No comments:
Post a Comment