Search This Blog

Wednesday, May 7, 2014

Panakam

#பானகம் : பானகம் என்பது எலுமிச்சை பழரசம், புது புளியிலிருந்து எடுத்த சாறு மற்றும்  வெல்லம் கலந்து, வாசனைக்கு ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் பானமாகும். இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.
இது சித்திரா பௌர்ணமி அன்று கடவுளுக்கு படைப்பதற்காக செய்யப்படும் ஒரு சுவையான பானமாகும்..


தேவையான பொருட்கள் :
ஒரு கப் பானகம் செய்ய தேவையான பொருட்கள் :
1 Tsp                                                          எலுமிச்சை சாறு
1 சிறிய கோலிகுண்டு அளவு       புளி *
1 அங்குல                                              இஞ்சி துண்டு
1 சிட்டிகை                                            ஏலக்காய் பொடி
1 சிட்டிகை                                            உப்பு
3 Tsp                                                         வெல்லம்

*புளி புது புளியாக இருப்பது அவசியம்.

செய்முறை :
புளியை சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
இஞ்சி தோலை நீக்கி, நசுக்கி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், எலுமிச்சை சாறு, உப்பு, மற்றும் ஏலக்காய் போடி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
புளியை கரைத்து அதனுடன் சேர்க்கவும்.
இஞ்சி சாரை மட்டும் மற்ற பொருட்களுடன் சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும்.
கலக்கிய பின்னர் டீ வடி கட்டியால் ஒரு கண்ணாடி கோப்பையில் வடி கட்டவும்.
மேலே விருப்பப்பட்டால் புதினா இலை தூவி பருகவும்.


அருமையான சுவை கொண்ட பானம் இந்த பானகம்.
வெய்யிலுக்கு மிக மிக அருமையான பானம்.




மற்ற சில பானங்கள்
புதினா கஷாயம்
புதினா கஷாயம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி ..
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
ஆம் பண்ணா
நீர் மோர்
நீர் மோர்
தேநீர்
தேநீர்


No comments:

Post a Comment