Search This Blog

Monday, May 26, 2014

Sirukeerai koottu

#சிறுகீரைகூட்டு : #சிறுகீரை தண்டு கீரை மற்றும் முளை கீரை வகையை சேர்ந்தது. ஆனால் இதன் இலைகள் மற்றவற்றுடன் ஒப்பிடும் போது சிறியதாக உள்ளதால் சிறு கீரை என பெயர் பெற்றது. இதன் அறிவியல் பெயர் : Amaranthus tricolor என்பதாகும்.
பொதுவாக கீரைகள் நார்சத்து நிறைந்தது. இக்கீரையில் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வைட்டமின் A , B மற்றும் C அதிக அளவில் உள்ளது. கல்லீரலுக்கு மிக்க வலிமையை கொடுக்கக் கூடியது. தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை தீரும்.
இனி இதனை கொண்டு பருப்பு மற்றும் தேங்காய் உபயோகித்து எவ்வாறு கூட்டு செய்யலாம் என காண்போம்.

சிறுகீரை கூட்டு

தேவையான பொருட்கள் :
1 கப்                                           சிறுகீரை, கழுவி பொடியாக அரிந்தது
1/8 கப்                                          பயத்தம் பருப்பு [ சிறு பருப்பு ]
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு

அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1/4 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு
5 அ 6                                          : மிளகு

தாளிக்க :
1/2 Tsp                                        : வெங்காய வடவம்
1/2 Tsp                                        : எண்ணெய்

செய்முறை :


மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

நான் இண்டக்ஷன் அடுப்பில் செய்யும் முறையை கொடுத்துள்ளேன்.

குக்கரில் கழுவிய பருப்பை சேர்த்து 1 சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி வெயிட் வைக்கவும். அடுப்பின் சூட்டை 800 ல் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் சூட்டை 120 கு குறைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும். ஆவி அடங்கியவுடன் திறந்து பருப்பை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


அதே குக்கரில்  அரிந்து வைத்துள்ள கீரையையும் மற்ற பொடிகளையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை 800 ல் வைத்து வேகவைக்கவும்.
உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.
பருப்பை சேர்த்து கலக்கி விடவும்.


அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்.

சிறுகீரை கூட்டு

அடுப்பை 500ல் வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இப்போது கேஸ் அடுப்பில் வாணலியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். வெங்காய வடவம் தாளித்து கீரையின் மேல் கொட்டவும்.
சுவையான சிறுகீரை கூட்டு தயார்.

சிறுகீரை கூட்டு

சாதத்தின் மேல் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது கார கறியுடன் சுவைத்தால் அபாரமாக இருக்கும்.
ரசம் சாதம் மற்றும் சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
வெந்தயக்கீரை கூட்டு வாழைப்பூ முருங்கைகீரை கூட்டு பசலை கீரை பூரி
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன் சிகப்பு கீரை சப்பாத்தி






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment