#கிரீன்டீ #துளசி யுடன் : சாலை ஓரங்களிலும் பராமரிக்காத வீட்டு தோட்டங்களிலும் துளசி செடி தானாகவே வளர்ந்திருக்கும். பல வீடுகளில் துளசி மாடத்தை முற்றத்தில் வைத்து துளசிக்கு பூஜை செய்வோர் உண்டு. பெருமாள் கோயில்களில் துளசி தண்ணீரை பிரசாதமாக அளிப்பது வழக்கம்.
துளசியில் நோய் எதிர்க்கும் சக்தி அபாரமாக உள்ளது. அதனாலேயே இந்த மூலிகை மிக பழங்காலம் தொட்டு மக்களால் உபயோகப் படுத்தப் படுகிறது.
நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் துளசிக்கு ஒரு தனி இடம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
இப்போது அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை கிரீன் டீயுடன் சேர்த்து எவ்வாறு பானம் தயாரிக்கலாம் என காண்போம்.
தேவையான பொருட்கள் :
175 ml தண்ணீர்
1 Tsp கிரீன்டீ
12 புதினா இலைகள் கழுவியது
1/4 அங்குல இஞ்சி துண்டு
1 Tsp எலுமிச்சை சாறு
செய்முறை :
அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
முதலில் கிரீன்டீயை சேர்க்கவும்.
பின்னர் துளசி இலைகளை கைகளால் பிய்த்து போடவும்.
இஞ்சியை நசுக்கி சேர்க்கவும்.
2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
ஒரு டீ கோப்பையில் எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு நிமிடகளுக்கு பின்னர் டீயை கோப்பையினுள் வடிகட்டவும்.
தேக்கரண்டியால் கலக்கி விடவும்.

துளசி மணத்துடன் கூடிய புத்துணர்ச்சி பானம் தயார்.
தினமும் அருந்தினால் நோய் நொடி அண்டாமல் இருக்கும்.
இனிப்பு தேவையெனில் வெல்லம் அல்லது தேன் சேர்த்து பருகலாம்.
No comments:
Post a Comment