பயத்தம் பருப்பு பகோடா : நாம் மசால் வடை செய்வது போல் இங்கு ராய்ப்பூரில் பயத்தம் பருப்பு கொண்டு வடை அல்லது பகோடா மிக பிரபலம்.
இந்த பகோடாவை செய்ய முளை கட்டிய பருப்பையும் தோலுடன் கூடிய பயத்தம் பருப்பையும் உபயோகித்துள்ளேன்.
இனி செய்முறையை காணலாம்.
தேவையான பொருட்கள் :
அரைக்க :
1/4 கப் முளை கட்டிய பயறு
1/4 கப் பயத்தம் பருப்பு தோலுடன்
2 சிகப்பு மிளகாய்
1/4 Tsp பெருங்காய தூள்
1/2 அங்குல இஞ்சி துண்டு
1/2 Tsp சீரகம்
1/2 Tsp பெருஞ்சீரகம்
1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
மாவுடன் சேர்க்க :
1 சிறிய அளவு வெங்காயம் பொடியாக நறுக்கவும்
3 Tsp கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8 கறுவேப்பிலை
6 பசலை கீரை பொடியாக நறுக்கவும் [ Spinach விரும்பினால் ]
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை :
தோலுடன் கூடிய பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மற்ற பொருட்களுடன் மிக்ஸி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடாகி விட்டதா என ஒரு சிறு உருண்டையை எண்ணெயில் போட்டு பார்க்கவும்.
உடனே பொரிந்து மேலே வந்தால் சரியான சூடு என எடுத்துக்கொள்ளலாம்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து எடுத்து தனியே தட்டில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் உருண்டைகளை முன்பு போல போட்டு பொரித்தெடுக்கவும்.
சூடான காபி அல்லது டீயுடன் சுவைக்கவும்

No comments:
Post a Comment