#புதினாகஷாயம் : எங்கள் வீட்டு தோட்டத்தில் மிக அதிக அளவில் புதினா விளைந்துள்ளது. அதனால் எந்தெந்த வகையில் நமது சமையலில் உபயோகிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் உபயோகித்து வருகிறேன்.
தினமும் காலையில் புதினா பச்சை தேநீர்தான் [ Mint Green tea ] அருந்துகிறேன். அதற்கு பத்திலிருந்து பதினைந்து இலைகளே போதுமானது.
ஒரு முறை அனைத்து இலைகளையும் பறித்து கழுவி உலர வைத்து பதப்படுத்தி வைத்துள்ளேன்.
மறுபடியும் இலைகள் தழைத்து வளர்ந்து ஒரு புதினா படுக்கை மீண்டும் உருவாகி விட்டது.
மறுபடியும் மிக அதிக அளவில் உபயோகிக்க என்ன செய்யலாம் என யோசித்த போது புதினா கஷாயம் போல தயாரித்து வைத்தால் என்ன என்று தோன்றியது.
அவ்வாறு தயாரித்தால் குளிர்பானம் தயாரிக்கும் போது உபயோகப் படுத்திக்கொள்ளலாமே என எண்ணினேன்.
இனி எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 கப் புதினா இலைகள்
2 1/2 கப் தண்ணீர்
1/2 அங்குல துண்டு இஞ்சி, நசுக்கிக்கொள்ளவும் [ விருப்பமானால் ]
செய்முறை :
புதினாவை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி காய் வெட்டும் பலகையின் மேல் வைத்து, சிறிது சாய்வாக பலகையை தூக்கி வைத்து தண்ணீரை வடிய விடவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் புதினாவை ஒரு கனமான கரண்டியின் பின் பகுதியினால் டப டபவென இலேசாக அடித்து கொதிக்குக் தண்ணீரில் சேர்க்கவும்.
இஞ்சியையும் சேர்க்கவும்.
தீயை நன்கு குறைத்து 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
20 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு இலைகளுடன் ஆற விடவும்.
ஆறிய பின்னர் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
குளிர் சாதன பெட்டியில் வைத்து நான்கு நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.
இந்த புதினா கஷாயத்தை கொண்டு ஐஸ் கட்டிகள் செய்யலாம். பானம் அருந்தும் போது புதினா ஐஸ் கட்டிகளை போட்டு பருகலாம்.
பழங்கள் கொண்டு குளிர் பானம் தயாரிக்கும் போது நீருக்கு பதிலாக இந்த புதினா கஷாயத்தை உபயோகிக்கலாம்.
நாம் அருந்தும் தண்ணீரில் 1 பாகம் புதினா கஷாயமும் 6 பங்கு நல்ல தண்ணீரும் கலந்து வைத்து அருந்தலாம்.
மேலும் அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டுமானால் எடுத்துக்கொண்ட தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி வைக்க வேண்டும்.

No comments:
Post a Comment