Search This Blog

Sunday, June 1, 2014

Muskmelon Maangai Juice

#முலாம்பழம்மாங்காய்பானம் : இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக எல்லாவற்றையும் முலாம் பழம் என்று தமிழிலும் Muskmelon என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றோம். மேல்தோல் சிறிது அழுத்தமாகவும் அதனுள்ளே மிருதுவான இன்னொரு தோல் போன்ற பகுதியும் காணப்படுகிறது. இவ்விரு தோல்களை அடுத்து இனிப்பான மஞ்சள் கலந்த ஆரஞ்சு சதைப்பற்றும் நடுவில் விதைகளும் கொண்டவையாக இருக்கின்றன.
சில முலாம்பழ வகைகள் வேறு நிறத்திலும் அமையபெற்றுள்ளது.



பழத்தில் இனிப்பு சுவை நன்றாக இருப்பதால் சர்க்கரை சேர்க்காமலேயே ஜூஸ் தயாரிக்கலாம். இனிப்புடன் சிறிது புளிப்பு சேர்த்தால் சுவை அருமையாக இருக்குமே என்று ஆம் பன்னா செய்ய தயாரித்த இனிப்பு கூட்டிய மாங்காயை சேர்த்து  ஜூஸ் செய்தேன். மிக அபாரமாக இருந்தது. இனி எப்படி என பார்ப்போம்.

முலாம்பழம் மாங்காய் பானம்


தேவையான பொருட்கள் :
1/2 பழம்                       முலாம்பழம், துண்டுகளாக்கி கொள்ளவும்.
3 Tbsp                             மாங்காய் இனிப்பு பழக்கூழ் 
1/2 Tsp                            உப்பு [ அட்ஜஸ்ட் ]
15                                   புதினா இலைகள்
1/2 கப்                            தண்ணீர்

செய்முறை :
எல்லாவற்றையும் மிக்சியில் அடித்து ஜூஸ் தயாரிக்கவும்.


வடி கட்ட தேவையில்லை.
இனிப்பு தேவை என்றால் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
மேலே புதினா இலைகளை வைத்து அலங்கரித்து பருகவும்.
புதினா நேரம் ஆக ஆக நிறம் மாறும் தன்மை உடையது.
அதனால் செய்தவுடன் பருகுவது நல்லது.
 கோடைக்கு உகந்த அருமையான பானம்.

முலாம்பழம் மாங்காய் பானம்

சுவைத்து மகிழவும்.

புதினா இலைகளுக்கு பதிலாக துளசி இலைகளை சேர்த்தும் இந்த பானத்தை தயாரிக்கலாம்.

இதையும் முயற்சி செய்யலாமே!!

முலாம்பழ மாம்பழ ஜூஸ் 
முலாம்பழம் ஆரஞ்சு ஜூஸ் 

No comments:

Post a Comment