#வாழைப்பூபசலைஅடை : #வாழைப்பூ #துவர்ப்பு சுவை உடையது. சில சமயம் துவர்ப்பு சிறிது கசப்பாகவும் இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் இதை மக்கள் விரும்புவது இல்லை.
ஆனால் வாழைப்பூ நார்சத்து, புரத சத்து மற்றும் அரிய வகை தாதுக்கள் நிறைந்துள்ளது.
இதில் சபோனின் என்ற ஒரு பொருள் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதையும் தடுக்கிறது.
இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கை குறைக்கவும் உதவியாக இருக்கிறது.
இத்தகைய மருத்துவ குணம் கொண்ட இந்த பூவை வாரத்தில் இரு தினங்களாவது உட்கொள்ளுவது நல்லது.
இங்கு வாழைப்பூவை உபயோகித்து செய்த அடையை எவ்வாறு செய்வது என காண்போம்.
தேவையான பொருட்கள் :
1/8 கப் புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1/4 கப் பச்சரிசி
1/4 கப் கடலை பருப்பு [ channa dal ]
1/4 கப் துவரம் பருப்பு [ arahar dal ]
1/4 கப் பயத்தம் பருப்பு [ moong dal ]
அரைக்க தேவையான மற்ற பொருட்கள்
3 சிகப்பு மிளகாய்
1 Tsp சீரகம்
1 Tsp சோம்பு [ பெருஞ்சீரகம் ]
1 சிறு துண்டு பெருங்காயம்
1/2 inch இஞ்சி
3/4 Tsp உப்பு
மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் :
3/4 cup வாழைப்பூ, பொடியாக அரிந்தது [ சற்று உள்ளே இருக்கும் பூக்களை தேர்வு செய்துகொள்ளவும் ]
3/4 cup கொடி பசலை, பொடியாக அரிந்து கொள்ளவும்
2 Tbsp கொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது
15 கறுவேப்பிலை
1 Tbsp வெங்காயம் பொடியாக அரிந்தது
2 சிட்டிகை மஞ்சத்தூள்
அடை சுட தேவையான அளவு எண்ணெய்
சுமார் 4 அடைகள் செய்யலாம்.

செய்முறை :
அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இரு முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
பருப்பு அனைத்தையும் ஒன்றாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து கழுவி விட்டு ஊறவைக்கவும்.
சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
பின்னர் பருப்பு ஊறவைத்த தண்ணீர் முழுவதும் வடித்து விட்டு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து முன்பு அரைத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.
அவற்றுடன் மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் சுற்றி விட்டு மாவை கரண்டியால் எடுத்து தோசை கல்லின் நடுவே வைத்து சமமாக பரப்பவும்.
அடை என்பதால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.
மேலும் சில வாழைப்பூ கொண்டு செய்யப்படும்
மேலேயும் சுற்றியும் எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி 2 அ 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் திறந்து பார்க்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
இரு பக்கமும் நன்கு சிவந்த வுடன் எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
அடையை தட்டில் வைத்து மேலே வெண்ணெய் அல்லது நெய் தடவி அவியல் வைத்து பரிமாறவும்.
பருப்பும் மற்ற பொருட்களும் கலந்து இருப்பதால் வாழைப்பூவின் துவர்ப்பு அதிகமாக தெரியாது. சுவைத்து மகிழவும்!!
Nutritional Value of Banana Flower:
As per the Africa Journal of Biotechnology, banana flower nutrition per 100g is as follows:
51 kcal
1.6g of Protein
.6g of Fat
9.9g Carb
5.7fgof Fiber
56mg of Calcium
73.3mg of Phosphorous
56.4mg of Iron
13mg of Copper
553.3 mg of Potassium
48.7mg of Magnesium
1.07mg of Vitamin E
[source : banana flower ]
மேலும் சில வாழைப்பூ கொண்டு செய்யப்படும்
No comments:
Post a Comment