#கொத்தமல்லி சட்னி : நாம் கொத்தமல்லியை பெரும்பாலும் வாசனைக்காகவே சமையலில் பயன் படுத்துகிறோம். சில உணவுகளே கொத்தமல்லியை பிரத்தியேகமாக உபயோகித்து செய்யப்படுகிறது. ஆனால் கொத்தமல்லியில் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் A, B [B1, B2, B3, B5, B6 and folate ], C, E and K ஆகியவை நிறைந்துள்ளன.
இவை தவிர முக்கியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய அரிய சத்துக்கள் நிறைந்துள்ள கொத்தமல்லியை தினமும் நமது சமையலில் பயன் படுத்துவது அத்தியாவசியமாகும்.
இங்கு ஒரு சட்னி செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் :
1 கப் கொத்தமல்லி நறுக்கியது
4 சிகப்பு மிளகாய்
20 - 25 புதினா இலைகள்
சிறிய நெல்லி அளவு புளி, நீரில் ஊறவைக்கவும்
1/4 Tsp பெருங்காய தூள்
3/4 Tsp உப்பு
1/2 Tsp எண்ணெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் சிகப்பு மிளகாயை வறுத்தெடுத்து மிக்ஸி பாத்திரத்தில் வைக்கவும்.
அடுப்பை நிறுத்தி விட்டு அதே சூட்டில் புதினாவை 2 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
கொத்தமல்லியில் உள்ள நீரே போதுமானது.
தேவையானால் சிறிது நீர் சேர்த்து அரைக்கலாம்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான மணமான கொத்தமல்லி சட்னி தயார்.
பொங்கல், உப்புமா, தோசை மற்றும் இட்லியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சாதத்திலும் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் மற்றும் பொரியலுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

No comments:
Post a Comment