#காலிப்ளவர் # வடை : எல்லோருக்கும் காலிப்ளவர் மஞ்சூரியன் மிகவும் பிடித்தமான உணவு வகை. அதே போல உளுந்துடன் செய்யப்படும் மெது வடையில் காலிப்ளவர் சேர்த்து பொரித்தெடுத்தால் காலிப்ளவர் வடையாகி விடும். இது சுவைக்க மிக மிக அருமையாக இருக்கும்.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அரைபட்டு பொங்கி வந்தவுடன் ஒரு கை உளுத்தம் மாவை [ 1/2 கப் ] ஒரு கிண்ணத்தில் எடுத்து குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும்.
காலையில் எடுத்து வைத்தால் மாலையில் உபயோகப்படுத்தி விட வேண்டும்.
இல்லையென்றால் மாவு புளித்து விடும். மேலும் எண்ணெயில் பொரிக்கும் போது அதிக எண்ணெயை குடிக்கும்.
இனி செய்முறையை காண்போம். சுமார் 6 முதல் 8 வடைகள் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் அரைத்த உளுத்த மாவு
2 Tbsp ரவா
1 Tbsp அரிசி மாவு
1/2 Tsp உப்பு
1/2 Tsp சீரகம்
1/4 Tsp ஓமம்
1/4 கப் காலிப்ளவர் பொடியாக நறுக்கியது
1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
10 கறுவேப்பிலை பொடியாக நறுக்கவும்
2 Tbsp வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.
செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழிந்த பின்னர் உப்பு, சீரகம், ஓமம் மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.
மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.
கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள மாவையும் இதே போல பொரித்தெடுக்கவும்.
காலிப்ளவர் வடையை சட்னி அல்லது சாம்பாருடன் சுவைக்கலாம்.
நேற்று இரவு உணவு : மக்காசோள ரவா கஞ்சியுடன் காலிப்ளவர் வடை.
மிக அருமையாக இருந்தது.
இதையும் செய்து பார்க்கலாமே!!
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அரைபட்டு பொங்கி வந்தவுடன் ஒரு கை உளுத்தம் மாவை [ 1/2 கப் ] ஒரு கிண்ணத்தில் எடுத்து குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும்.
காலையில் எடுத்து வைத்தால் மாலையில் உபயோகப்படுத்தி விட வேண்டும்.
இல்லையென்றால் மாவு புளித்து விடும். மேலும் எண்ணெயில் பொரிக்கும் போது அதிக எண்ணெயை குடிக்கும்.
இனி செய்முறையை காண்போம். சுமார் 6 முதல் 8 வடைகள் செய்யலாம்.
காலிப்ளவர் வடை மக்காசோள ரவா கஞ்சி உடன் |
தேவையான பொருட்கள் :
1/2 கப் அரைத்த உளுத்த மாவு
2 Tbsp ரவா
1 Tbsp அரிசி மாவு
1/2 Tsp உப்பு
1/2 Tsp சீரகம்
1/4 Tsp ஓமம்
1/4 கப் காலிப்ளவர் பொடியாக நறுக்கியது
1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
10 கறுவேப்பிலை பொடியாக நறுக்கவும்
2 Tbsp வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.
செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழிந்த பின்னர் உப்பு, சீரகம், ஓமம் மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.
கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள மாவையும் இதே போல பொரித்தெடுக்கவும்.
காலிப்ளவர் வடையை சட்னி அல்லது சாம்பாருடன் சுவைக்கலாம்.
நேற்று இரவு உணவு : மக்காசோள ரவா கஞ்சியுடன் காலிப்ளவர் வடை.
மிக அருமையாக இருந்தது.
இதையும் செய்து பார்க்கலாமே!!
மெது வடை |
No comments:
Post a Comment