Search This Blog

Friday, June 6, 2014

Thakkali Kai Sambar

#தக்காளிகாய் #சாம்பார் : நாம் பெரும்பாலும் தக்காளி பழத்தையே சமையலில் உபயோகிக்கிறோம். காய் தக்காளி பழத்தை போன்று சுவை இல்லாவிட்டாலும் அதற்கென்று தனி மணமும் சுவையும் உடையது. இந்த தக்காளி காயை கொண்டு சாம்பார் மற்றும் கூட்டு செய்தால் அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.


தேவையான பொருட்கள் :


வேகவைத்த துவரம் பருப்பு                  : 3 Tbsp
தக்காளிக்காய்                                           : 5 -6, வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்காய்                                   : 1,துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பலாகொட்டை                                       : 4, வெட்டி தோல் நீக்கவும்.
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 10 - 12
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு


சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
புளியை இளஞ்சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.


சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.

குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.

அதில் சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

வெட்டிவைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகள் மற்றும் பலாக்கொட்டையை  சேர்க்கவும்.
மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.


வெங்காய வாசனை வந்தவுடன் தக்காளிகாயை போட்டு சிறிது வதக்கி  கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.

1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.


கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

சுவையான சாம்பார் தயார்.


சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... என்ன சுவை!!..என்ன சுவை!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



வெங்காய சாம்பார் 
மற்ற சாம்பார் வகைகள்

டர்னிப் சாம்பார் 




No comments:

Post a Comment