Search This Blog

Wednesday, March 19, 2014

Rawa Buckwheat Idly

#ரவாபாப்பரைஇட்லி : #பாப்பரை [ #Buckwheat ] கொண்டு உப்புமா, பொங்கல், பாயசம், கொழுக்கட்டை போன்ற பல்வேறு உணவுகளை செய்து பார்த்து விட்டோம். இன்று ரவாவுடன் சேர்த்து இட்லி செய்து பார்த்த போது அருமையாக அமைந்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
கொடுத்துள்ள அளவில் சுமார் 12 இட்லிகள் செய்யலாம்.


ரவா பாப்பரை இட்லி

தேவையான பொருட்கள் :
1/4 கப்                                      தோசை மாவு புளித்தது
3/4 கப்                                      ரவா
1/4 கப்                                      பாப்பரை [ buckwheat ]
1 Tsp                                          உப்பு
1 பாக்கெட்                            Eno Fruit salt 

மாவுடன் சேர்க்க :
1                                               வெங்காயம், பொடியாக நறுக்கியது
1                                               பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
8                                               கருவேப்பிலை, பொடியாக நறுக்கியது
1 Tbsp                                      காரட் துருவியது

தாளிக்க :
1 Tsp                                        கடுகு
1 Tsp                                        உளுத்தம் பருப்பு
3 Tsp                                        கடலை பருப்பு
1/4 Tsp                                     பெருங்காய தூள்
3 Tsp                                        எண்ணெய்
செய்முறை :
முதலில் மிக்சியில் பாப்பரையை கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த பாப்பரை, தோசை மாவு, ரவா மற்றும் உப்பு அனைத்தையும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
தண்ணீர் தேவையானால் இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.


அரை மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு பெருங்கயத்தூள் சேர்க்கவும்.
அதன் பின் கருவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்.
காரட்டையும் மாவுடன் சேர்த்து கலக்கி விடவும்.

இப்போது அடுப்பில் இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் எண்ணெய் தடவி வைக்கவும்.
இப்போது மாவில் Eno Fruit Salt சேர்த்து கலக்கவும்.
மாவு நுரைத்துக் கொண்டு சிறிது எழும்பி வரும்.
இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து மூடி 7 முதல் 9 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் வெளியில் எடுத்து தேக்கரண்டியால் இட்லியை தட்டிலிருந்து எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் தட்டில் எண்ணெய் தடவி அடுத்த ஈடு ஊற்றி எடுக்கவும்.

சூடான இட்லியை  தேங்காய் சட்னி யுடனோ 

அல்லது சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி யுடனோ சுவைக்கவும்.
ரவா பாப்பரை இட்லி






மற்ற சில சிற்றுண்டிகள் முயற்சி செய்து பார்க்க
இட்லி
இட்லி
காஞ்சிபுரம் இட்லி
காஞ்சிபுரம் இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
மசால் தோசை
மசால் தோசை
கொடிபசலைகீரை  பூரி
கொடிபசலை கீரை பூரி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க


இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


No comments:

Post a Comment