#குதிரைவாலிஇட்லி : இன்று இரவு சிற்றுண்டிக்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக தொடர்ந்து அவல் உப்புமா, ரவா உப்புமா என தயாரித்தனால் இன்று வேறு ஏதேனும் மாற்றி செய்ய எத்தனித்த போது தோன்றியதுதான் குதிரைவாலி கொண்டு செய்த இந்த இட்லி!! இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து புளிக்க வைக்க நேரம் இல்லை. அதனால் #ரவாஇட்லி செய்வதுபோல் செய்து பார்க்கலாமே என முயற்சி செய்தேன். அருமையாக வந்தது. அதனால் சுடச்சுட உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை!!
#குதிரைவாலி சிறு தானிய வகைகளுள் ஒன்றாகும். இதன் நார் சத்து அரிசி மற்றும் கோதுமையை விட அதிகமாகும்.
இந்த சிறு தானியத்தில் தையமின் [ Thiamin ] என்று சொல்லப்படுகிற Vitamin b6 அதிக அளவில் நிறைந்துள்ளது.
குதிரைவாலி வரகு மற்றும் சாமை போன்று மிகச்சிறிய ஜவ்வரிசி போல இல்லாமல் இன்னும் மிகச் சிறியதாக இருக்கும். சுவையும் வரகு மற்றும் சாமையை விட நன்றாக இருக்கும். இதன் அளவு சன்னமாக உடைத்த கோதுமை போன்றே இருக்கும்.
English : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh : Bhagar Or Varai
Kannada : Oodalu
Oriya : Kira
Punjabi : Swank
Telugu : Udalu Or Kodi Sama
Scientific Name : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Barnyard Millet
To know on Millets
இனி இதனை உபயோகித்து இட்லி எவ்வாறு செய்வது என காணலாம்.
சுமார் 10 இட்லிகள் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 கப் குதிரைவாலி
1/3 கப் உளுந்து மாவு [ dry powder ]
1 Tsp உப்பு
1/2 கப் தயிர்
1 eno Fruit packet [ fruit salt ]
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் குதிரைவாலியை எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ரவா போல உடைத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் உடைத்த குதிரைவாலியை பாத்திரத்திற்கு மாற்றவும்.
இதனுடன் உளுந்து மாவு, உப்பு, மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
சிறிது தளர இருப்பது நலம்.
குதிரைவாலி ஊறும் போது தண்ணீரை இழுத்துக்கொள்ளும்.
சுமார் இரண்டு மணிநேரம் அல்லது குதிரைவாலி நன்கு ஊரும் வரை ஊறவிட வேண்டும்.
குறிப்பிட்ட கால அளவு ஊறிய பின்னர் :
இட்லிபானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
மாவில் eno Fruit salt ஐ சேர்த்து கலக்கவும்.
காற்று குமிழிகள் உருவாகி மாவு மேலெழும்பி வரும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை நிரப்பவும்.
அடுப்பில் தண்ணியுடன் சூடாகிக்கொண்டிருக்கும் இட்லி பானையில் வைத்து 5 முதல் 8 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்து விட்டதா என்று பார்த்த பின்னர் வெளியே எடுத்து தேக்கரண்டியினால் இட்லியை இட்லி தட்டிலிருந்து எடுத்து ஒரு பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி அடுத்த ஈடு வேக வைக்கவும்.
இட்லியை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சுவைக்கவும்.
இங்கு கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது.
மற்ற உணவு வகைகள் :
தொட்டுக்கொண்டு சாப்பிட
தொட்டுக்க
இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

குதிரைவாலி அரிசி |

Kuthiraivaali - Barnyard Millet |

|
|
|
||||||
|
|
|
தொட்டுக்கொண்டு சாப்பிட
தொட்டுக்க
இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment