Search This Blog

Showing posts with label bajra. Show all posts
Showing posts with label bajra. Show all posts

Wednesday, May 27, 2015

Kambu-Pearl-Millet

#கம்பு
ஆங்கில பெயர் : Pearl Millet
ஹிந்தி பெயர் : பாஜ்ரா
அறிவியல் பெயர் : Pennisetum glaucum
கம்பு


#சிறுதானியங்கள் பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
Millet
http://en.wikipedia.org/wiki/Millet

இங்கு கம்பு உபயோகித்து செய்யப் பட்டுள்ள உணவு பொருட்களின் சமையல் குறிப்புகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
சிற்றுண்டி வகைகள்
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு  கூழ்
கம்பு தோசை
கம்பு தோசை
கம்பு இட்லி
கம்பு இட்லி


கார வகைகள் 
கம்பு பகோடா
கம்பு பகோடா
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு




Saturday, May 16, 2015

Kambu Idli

#கம்புஇட்லி : #கம்பு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இந்தியாவிலேயே மிக அதிகமாக பயிரிடப்படும் சிறுதானிய வகை ஆகும்.
இதனை உபயோகித்து இட்லி செய்யும் முறையை இங்கு காண்போம்.

கம்பு இட்லி

தேவையான பொருட்கள் :
1 cupஇட்லி அரிசி
1 cupகம்பு
1/2 cupஉளுத்தம் பருப்பு
1 Tspவெந்தயம்
2 Tspஉப்பு [ Adjust ]

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசியையும் கம்பையும் எடுத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்துக்கொள்ளவும்.
நன்கு இரண்டு மூன்று முறை கழுவிய பின்னர் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவவும்.
முதலில் உளுந்தை அவ்வப்போது தண்ணீர் சிறுக சிறுகத் தெளித்து நன்கு உப்பி வரும்வரை அரைத்து எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி விடவும்.
உளுந்து மாவு சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டால் மேலே மிதக்கும்.
மேலும் மாவின் நிறமும் வெளுத்து வரும்.
அதுதான் சரியான பதம்.

பின்னர் அரிசி கம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த அரிசி சோள மாவை எடுத்து பாத்திரத்திற்கு மாற்றும் முன்னர் உப்பு சேர்த்து ஓரிரண்டு சுற்றுக்கள் சுற்ற விடவும்.
மாவரைக்கும் இயந்திரத்தை அணைத்து விட்டு உளுந்து மாவு எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் எடுக்கவும்.

மாவரைக்கும் இயந்திரத்தில் ஒரு Tbsp அளவு தண்ணீர் விட்டு ஒட்டியிருக்கும் மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கையினால் நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அதாவது முதல் நாள் மாலை மாவை அரைத்து வைத்தால் மறு நாள் இட்லி தயாரிக்கலாம்.

இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும்.
எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.
மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
இப்போது குழிகளில் மாவை நிரப்பவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.
ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.
கம்பு இட்லி
கம்பு இட்லி கம்பு இட்லி
குறிப்பு :
மாவு எடுத்து வைக்கும் பாத்திரம் பெரியதாக இருப்பது அவசியம்.
ஏனெனில் புளித்து மாவு இரண்டு மடங்காய உப்பி வரும்.

இட்லி பானையினுள் அல்லது குக்கரினுள்  இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒன்றன் மேல் ஒன்றாக தட்டுக்களில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கலாம்.
அவ்வாறு செய்யும் போது மேலே உள்ள தட்டிலிருந்து தண்ணீர் கீழே உள்ள தட்டின் இட்லியின் மேல் விழுந்து இட்லியை நச நசவென ஆகி விடும்.
அதை தடுக்க இட்லி தட்டில் மாவு நிரப்பிய பிறகு மாவின் மேலும் ஒரு ஈரமான துணியை விரித்து உள்ளே வைக்க வேண்டும். அப்போதுதான் மேல் தட்டிலிருந்து விழும் தண்ணீரை இந்த துணி உறிஞ்சிக்கொள்ளும்.





மற்றும் சில சமையல் குறிப்புகள்
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
ரவா பாப்பரை இட்லி
ரவா பாப்பரை இட்லி
இட்லி
இட்லி
சோள இட்லி
சோள இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க






இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Sunday, March 16, 2014

Bajra Singhara Neer Kozhukattai

கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை : சிங்கரா என்பது தண்ணீரில் விளையக்கூடிய ஒரு தாவரத்தின் பழமாகும். இங்கு ராய்ப்பூரில் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக குவித்து குளிர் கால இறுதியில் விற்கப்படும். இது பார்ப்பதற்கு கூரையிலிருந்து தலை கீழாக தொங்கும் வவ்வாலை போன்ற தோற்றமும் நிறமும் கொண்டவையாக இருக்கும். இதன் தோல் மிகவும் அழுத்தமாக இருக்கும். வேக வைத்தால் இளகி உரிக்க இலகுவாக வரும். உள்ளே சாப்பிடும் பகுதி வெள்ளையாக இருக்கும். பிரத்யேக மணம் ஏதும் கிடையாது.
It is called water caltrop, water chestnut, buffalo nut, bat nut, devil pod, ling nut, singhara or panipal.
It belongs to any of three extant species of the genus Trapa : Trapa natans, T. bicornis and the endangered Trapa rossica. The species are floating annual aquatic plants, growing in slow-moving water upto 5 meters deep, native to warm temperate parts of Eurasia and Africa.

In India it is known as singhara or paniphal [ Eastern India ] and is widely cultivated in fresh water lakes. The fruits are eaten raw or boiled. When the fruit has been dried, it is ground to a flour called singhara ka atta. Singara ka atta is used in many religious rituals and can be consumed as a phalahar diet on the Hindu fasting days, the navaratras

Source : Singhara/water chestnut

Health Benefits of Singhara [ water chestnut ]

இதனை காயவைத்து மாவாக்கி விரத நாட்களில் சாப்பிடுகிறார்கள். இதனை உபயோகித்து கொழுக்கட்டை செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது.
இனி எப்படி என பார்ப்போம்.

கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     சிங்கார மாவு
1/4 கப்                                      கம்பு ரவா
1 Tbsp                                       ஓட்ஸ்
1/4 கப்                                     தேங்காய் துருவல்
1/2 Tsp                                      உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tbsp                                     நில கடலை
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
1 Tsp                                       எண்ணெய்

மற்ற பொருட்கள் :
1/2 கப்                                  வெந்தய கீரை
1 Tbsp                                    காரட் துருவியது
1 Tbsp                                    கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                              கருவேப்பிலை

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிங்கார மாவு, கம்பு ரவா,  தேங்காய் துருவல், ஓட்ஸ் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.


சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


 அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.
சேர்த்தவுடன் கரண்டியால் கிளற வேண்டாம்.

தீயை சிறியதாக்கி 3 நிமிடங்கள் உருண்டைகளை வேக விடவும்.


பிறகு ஒரு கரண்டியால் உருண்டைகளை உடைக்காமல் கிண்டி விடவும்.
உருண்டையின் உள்  வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.


கொதித்த தண்ணீரும் தற்போது கஞ்சி பதத்தில் இருக்கும்.
இந்த கஞ்சியை கீழே கொட்டிவிட வேண்டாம்.
உப்பு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி என்னை விட்டு கடுகை  வெடிக்க விடவும்.
பிறகு மிளகாயை கிள்ளி  போட்டு, கடலையை  சிவக்க வறுத்த பின் கருவேப்பிலையையும் கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
பிறகு வெந்தய கீரை மற்றும் காரட் சேர்த்து சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும். 1 அல்லது 2 நிமிடம் மூடி வேக விடவும்.
பிறகு வேக வைத்த உருண்டைகளை சேர்த்து உப்பும் சேர்த்து கிளறி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான நீர் கொழுக்கட்டை தயார். 




மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
கம்பு தோசை
கம்பு 
தோசை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி 
ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு
கூழ்








Sunday, February 9, 2014

Kambu Koozh

#கம்புகூழ் : ஆங்கிலத்தில் #கம்பு #PearlMillet என அழைக்கப்படுகிறது.
ஹிந்தியில் பாஜ்ரா [ #Bajra ] எனவும், தெலுங்கில் #Sajja அல்லது #Gantilu  எனவும், கன்னடத்தில் #Sajje எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் : Pennisetum glaucum

கம்பு [ Pearl millet ]

உலகளவில் சிறு தானிய வகைகளில் மிக அதிகமாகப்  பயிரிடப்படும் தானியம் கம்பு ஆகும்.
மேலும் அறிய
சிறு தானியங்கள்
முழு கம்பு தானியம், கம்பு குருணை [ ரவா ], மற்றும் கம்பு மாவு சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.
இங்கு கம்பு உபயோகப் படுத்தி கூழ் [ கஞ்சி ] செய்வது எப்படி என பார்ப்போம்.

கம்பு கூழ்

தேவையான பொருட்கள் :
1 Tbsp                                         கம்பு
1/2 கப்                                        தயிர்
3                                                  சின்ன வெங்காயம் ( விருப்பப்பட்டால் )
6                                                  கருவேப்பிலை ( விருப்பப்பட்டால் )
1 சிட்டிகை                             பெருங்காயதூள்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தண்ணீர் விட்டு கழுவிய பின் வடித்து விட்டு அப்படியே பத்து நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு மிக்சியில் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அரைத்த கம்பு குருணையையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
சில நிமிடங்களில் கஞ்சி பதத்தை அடைந்து விடும்.
மேலும் சில நிமிடங்கள் கம்பு நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.

நன்கு ஆறிய பின் தயிரை கடைந்து விட்டு கலக்கி உப்பு சரி பார்க்கவும்.
ஒரு பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி வெங்காய துண்டுகள் மற்றும் கருவேப்பிலை தூவி சுவைக்கவும்.
கம்பு கூழ் கம்பு கூழ்

குறிப்பு :

  • முதல் நாளே கஞ்சியை தயாரித்து மறுநாள் மோரோ அல்லது கடைந்த தயிரோ சேர்த்தும் அருந்தலாம். இவ்வாறு செய்வதால் சிறிது புளிப்பு சுவையுடன் இருக்கும். சுவையும் மிக மிக அருமையாக இருக்கும்.
  • கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து சேர்த்த கஞ்சி இன்னும் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
மற்ற கஞ்சி வகைகள் :
குதிரைவாலி வெந்தய கஞ்சி கோதுமைரவா கஞ்சி மக்காசோளரவா கஞ்சி சோள கஞ்சி


Tuesday, November 26, 2013

Bajra Dosai

#கம்புதோசை : சிறுதானியம் வகைகளில் #கம்பு ம் ஒன்றாகும். சென்னையில் பல இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து கம்பு கூழ் விற்பதை காணலாம். உடலுக்கு மிகவும் நல்லது . மிக முக்கிய தாது சத்துகள் நிரம்பியது. இங்கு கம்பு மாவிலிருந்து தோசை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம். கொடுக்கப் பட்டுள்ள அளவு சுமார் 9 முதல் 10 தோசை செய்யலாம்.

கம்பு தோசை

தேவையான பொருட்கள் :
புளித்த தோசை ( அ ) இட்லி மாவு                : 1/2 கப்
கோதுமை மாவு                                               : 1/2 கப்
கம்பு மாவு                                                           : 1 கப்
உப்பு                                                                       : 1 Tsp
சீரகம்                                                                     : 1 Tsp
கொத்தமல்லி தழை சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் பொடியாக நறுக்கியது        : 2 Tbsp

செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கொத்தமல்லி, கருவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம் மற்றும் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும்.


காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு ரௌண்டாக ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .
அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த  தோசை ஊற்றும் முறையாகும்.

தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.


பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.


பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சட்னி யுடள் பரிமாறவும்.

கம்பு தோசை

குறிப்பு :
புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு இல்லையெனில் தயிர் உபயோகப்படுத்தலாம்.





மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி 
ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு
கூழ்


தோசை மாவு
தோசை மாவு
தோசை
தோசை
மசால் தோசை
மசால் தோசை
பொடி தோசை
பொடி தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.