Search This Blog

Monday, January 23, 2017

Beetroot-Vazhaithandu-Aval-Upma

#பீட்ரூட்வாழைத்தண்டுஅவல்உப்புமா : நெல்லை ஊறவைத்து சூடான வாணலியில் வறுத்தெடுத்து உடனே கல்லில் போட்டு உலக்கையால் தட்டி எடுத்து உமி நீக்கினால் #அவல் தயார். இப்போது அவல் தயாரிக்க மின்சாரத்தில் இயங்கும் உலக்கை இயந்திரம் வந்து விட்டது. அதனால் அவல் மெல்லியதாகவும் கெட்டியாகவும் கிடைக்கிறது. மெல்லியதாக இருக்கும் அவல் பால் ஊற்றி அல்லது வெள்ளம் தேங்காயுடன் கலந்து சாப்பிட அருமையாய் இருக்கும். கெட்டி அவல் உப்புமா செய்ய நன்றாக இருக்கும்.
முன்பே பல காய்கறிகளை சேர்த்து அவல் உப்புமா செய்முறையை பார்த்திருக்கிறோம். இப்போது பீட்ரூட் மற்றும் வாழைத்தண்டு சேர்த்து #உப்புமா செய்யும் விதத்தை காண்போம்.



தேவையானவை :
1 கப்கெட்டி அவல்
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1/4 கப்பீட்ரூட்  துருவியது
1 Tbspபச்சை பட்டாணி வேக வைத்தது
1/4 கப்வாழைத்தண்டு மெல்லியதாக அரிந்தது
1 or 2பச்சை மிளகாய்
2 pinchமஞ்சத்தூள்
1/4 Tspசீரகத்தூள்
1/4 Tspமிளகாய்த்தூள் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tbspநிலக்கடலை
1/4 Tspபெருங்காயத்தூள்
2 Tspநல்லெண்ணெய்
அலங்கரிக்க :
1 Tbspகேரட் துருவியது
1 Tbspகொத்தமல்லி தழை

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கெட்டி அவலை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஓரிரு முறை கழுவவும்.
அதில் 1/2 Tsp உப்பு தூவி 1/4 கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
வறுபட்டதும் பெருங்காயத்தூள் சேர்த்து கருவேப்பிலை கிள்ளி போட்டு கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வெளிர் நிறமாக மாறியதும் பீட்ரூட், வாழைத்தண்டு மற்றும் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் 2 சிட்டிகை மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
தட்டு போட்டு மூடி 2 நிமிடங்கள் வேக விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு உப்பு போட்டு பிசறி வைத்துள்ள அவலை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்த்து தேவையெனில் உப்பு சேர்க்கவும்.
1/2 Tsp எலுமிச்சை சாறு [ விருப்பப்பட்டால் ] சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின்னர் திறந்தாள் சூடான சுவையான பீட்ரூட் வாழைத்தண்டு அவல் உப்புமா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டும் சுவைக்கலாம்.
குறிப்பு : அவலின் தன்மைக்கு [ கெட்டித் தன்மை ] ஏற்ப உப்பு சேர்த்து பிசறி வைக்க தண்ணீரின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.






மேலும் சில சுவை மிகுந்த உணவுக் குறிப்புகள்

Aval kesari Aval upma Lemon Aval
Aval sakkarai pongal Puli sundal

பல வகையான சமையல் செய்முறைகள்