Search This Blog

Saturday, September 13, 2014

Lemon Aval

#எலுமிச்சைஅவல் :  சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவல்தான் காலை உணவாக உண்ணப்படுகிறது. அவலை இங்கு போஹா என்று அழைக்கிறார்கள். சாலையோர கடைகளில் ஆவியில் உப்பு கலந்த அவல் வெந்து கொண்டிருக்கும். அதனை ஒரு தட்டில் வைத்து வெங்காயம், உருளை கிழங்கு, கொத்தமல்லி மற்றும் ஒமப்பொடி தூவி பரிமாறப்படும். சூடாக சாப்பிட்டால் மிக மிக ருசியாக இருக்கும்.
முன்பு ஒரு பதிவில் அவல் உப்புமா காய்கறிகள் கொண்டு  செய்வது என பார்த்தோம். இப்போது அதே அவல் மற்றும் காய்கறிகள் உபயோகித்து எலுமிச்சை சேர்த்து சிறிது வித்தியாசமாக ஒரு அவல் உப்புமா செய்வதெப்படி என காணலாம்.

எலுமிச்சை அவல்


தேவையான பொருட்கள் :
1 கப்                                            கெட்டி அவல்
1/2 Tsp                                           உப்பு
2 Tsp                                             எலுமிச்சை சாறு

காய்கறிகள் :
1/4 கப்                                         காரட் மெல்லிய நீள துண்டுகளாக்கவும்
1/4 கப்                                          காலி ப்ளோவேர் துண்டுகள்
1/4 கப்                                          குடைமிளகாய் துண்டுகள்
2 Tbsp                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                                    கருவேப்பிலை
6                                                    பசலை கீரை
1                                                    வெங்காயம்
4                                                    பட்டன் காளான்
2                                                    பச்சை மிளகாய்

தாளிக்க :
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
1 Tsp                                             கடலை பருப்பு
2 Tsp                                             நிலகடலை
2 Tsp                                             எண்ணெய்

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 சிட்டிகை                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                                         சீரகத்தூள்
1/2 Tsp  ( அட்ஜஸ்ட் )            மிளகாய்த்தூள்
1/2 Tsp                                           உப்பு

செய்முறை :
அவலை இரண்டு முறை நன்றாக கழுவி உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.அதனுடன் காலிப்ளவர், காரட் ஆகியவற்றை ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் 5 முதல் 8 நிமிடங்கள் வேக விடவும்.

ஆவியில் வேகும் அவல், காலிப்ளவர், காரட்

வாணலியை மற்றொரு  அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
உளுத்தம் பருப்பையும் கடலையையும் வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காயத்தூள், மஞ்சத்தூள், மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்தவுடன் கொத்தமல்லியை போட்டு வதக்கவும்.
நீள  வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் வெங்காயத்தை வதக்கவும்.
அடுத்து குடை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது கழுவி வெட்டி வைத்த  காளான் மற்றும் பசலை கீரையை சேர்த்து வதக்கவும்.
காளான் வதங்கிய பின்னர் தீயை குறைத்து எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
இப்போது ஆவியில் வெந்த அவல் காய்கறி கலவையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். உப்பு சரி பார்க்கவும்.

அவல் காய்கறி கலவையை வெங்காயத்துடன் சேர்க்கவும்.

அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு மூடியினால் மூடி மூன்று நிமிடங்கள் அடுப்பின் சூட்டின் மேல் வைத்திருக்கவும்.
பின்னர் திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

எலுமிச்சை அவல்

சுவையான சத்து மிகுந்த எலுமிச்சை அவல் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை.







மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா பசலை கீரை பூரி சேமியா உப்புமா சைவ ஆம்லட் சேமியா பாயசம்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


No comments:

Post a Comment