Search This Blog

Friday, April 7, 2017

Milagu-Podi-with-Flax-Seed

#மிளகுப்பொடிஆளிவிதையுடன் : நாம் நமது மூதாதையர் காலந்தொட்டு மிளகை சமையலில் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவிற்கு காரம் கொடுப்பதற்காக மட்டுமன்றி அதன் மருத்துவ குணங்களுக்காகவும் #மிளகு பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல் மற்றும் செரிமானம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக மிளகு செயல் படுகிறது.
#ஆளிவிதை உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தரக்கூடிய ஒரு அருமையான விதையாகும்.
இவ்விரண்டுடன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சத்தான ஒரு பொடி செய்வதெப்படி என காண்போம்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

தேவையானவை :
1/4 கப்மிளகு
1/4 கப்சீரகம்
1/4 கப்ஆளிவிதை
1 Tspஉப்பு
1 கைப்பிடிகாய்ந்த கருவேப்பிலை இலைகள்

செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
ஆளிவிதையை போட்டு கைவிடாமல் கிளறவும்.
நல்ல மணத்துடன் படபடவென பொரிந்து வரும் பொது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டவும்.
அதே வாணலியில் மிளகு சேர்த்து சிறிது சூடு வரும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே போல சீரகத்தையும் சூடு ஏறும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
நிழலில் காயவைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை சூடான வாணலியில் போட்டு சூடாக்கவும்.
அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆற விடவும்.


மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

ஆறியதும் மிக்சியில் உதவியுடன் நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி தயாரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து உண்ணலாம். ஆளிவிதையின் மணமும் மிளகின் காரமும் நல்ல சுவையை கொடுக்கும்.
சூப் மேல் தூவி உண்ணலாம்.
காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் சாலட் மற்றும் பழங்களின் சாலட் ஆகியவற்றின் மேலும் தூவி உண்ணலாம்.
ஆம்லெட் மீது தூவி சாப்பிடலாம்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்









மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
கரம் மசாலா பொடி
கரம் மசாலா
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முரு ங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி






Tuesday, April 4, 2017

Vazhakkai-Poriyal

 #வாழைக்காய்பொரியல் : #வாழைக்காய் உபயோகித்து ஒரு மிக மிக எளிமையான பொரியல் செய்யலாம். மரத்திலிருந்து உடனடியாக பறித்து செய்யும் போது மிக மிக சுவையாக இருக்கும்.

Vazhakkai [ raw banana ] Poriyal

தேவையானவை :
1வாழைக்காய்
2 சிட்டிகைமஞ்சத்தூள்
1 Tbsp தேங்காய் துருவல்
1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
தேவையானவை :
1/2 Tspகடுகு
1சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉளுத்தம் பருப்பு
10கருவேப்பிலை இலைகள்
1 Tspஎண்ணெய்

கொத்தமல்லி தழை அலங்கரிக்க [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
வாழைக்காயை தோல் சீவி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு மிளகாயை கிள்ளி போடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பையும் சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்.
கருவேப்பிலையை கிள்ளி போட்டு வாழைக்காயை 1/2 அங்குல துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் உப்பு சரி பார்த்து தேங்காய் துருவலை சேர்க்கவும்.
நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிய உணவிற்கு சாம்பார் மற்றும் ரசம் சாதம் ஆகியவற்றுடன் ருசிக்க அருமையாக இருக்கும்.


Vazhakkai [ raw banana ] Poriyal

குறிப்பு :
வாழைக்காயை அரிந்தவுடன் உபயோகப்படுத்தவும்.
இல்லையென்றால் அரிந்த துண்டுகளை தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அப்போதுதான் நிறம் மாறாமல் இருக்கும்.







வாழைப்பூ பருப்புசிலி
வாழைப்பூ பருப்புசிலி
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் மஞ்சூரியன்
காலிப்ளவர் மஞ்சூரியன்
கேரட் பொரியல்
கேரட் பொரியல்
பலாமுசு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி



Saturday, April 1, 2017

Pumpkin-Morekuzhambu

#பூசணிக்காய்மோர்க்குழம்பு : #மோர்க்குழம்பு என்றவுடன் நினைவிற்கு வருவது பூசணிக்காய் மோர்க்குழம்புதான். ஹோட்டலில் மதிய உணவுக்கு பரிமாறப்படும் மோர்க்குழம்பு கட்டாயமாக பூசணி மோர்க்குழம்பாகத்தான் இருக்கும். உப்பு காரம் புளிப்பு ஆகிய அனைத்தும் பூசணி துண்டுகளில் ஏறி இருக்கும். இந்த பூசணி துண்டுகளை சுவைக்கும் போது அதன் சாறு நாக்கில் பட்டு தொண்டையில் இறங்கும் போது ஆஹா.... அலாதிதான்!!
மோர்க்குழம்பு செய்முறை ஐந்து நிலைகளை கொண்டது.

  • தயிரை கரண்டியால் அடித்து சிறிது பெருங்காயம் மற்றும் நசுக்கிய இஞ்சி சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
  • தேங்காய் மற்றும் அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
  • மோர்க்குழம்பில் சேர்க்க வேண்டிய காயை வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • வெந்த பின்னர் அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • கடைசியாக தாளித்து கொட்ட வேண்டும். 

Pumpkin Morekuzhambu

 தேவையானவை :
1 கப்தயிர்
சிறிய துண்டுஇஞ்சி
2 சிட்டிகைபெருங்காய தூள்
150 கிராம்பூசணிக்காய்
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
அரைக்க :
3 Tspதேங்காய் துருவல்
1 Tspகடலை பருப்பு
1/2 Tspபச்சரிசி
1 Tspசீரகம்
1/2 Tspகொத்தமல்லி விதை
4 or 5மிளகு
2பூண்டு பற்கள்
4 or 5சின்ன வெங்காயம்
1 சிறியதுவெங்காயம்
1 or 2பச்சை மிளகாய்
1 or 2சிகப்பு மிளகாய்
சின்ன துண்டுஇஞ்சி
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/2 Tspசீரகம்
1 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspபெருங்காயத்தூள்
1சிகப்பு மிளகாய்
10கருவேப்பிலை
கொத்தமல்லி தழை வாசனையூட்டவும் அலங்கரிக்கவும்.

செய்முறை :
அரை மணி நேரம் முன்னதாக கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை ஊறவைத்து கொள்ளவும்.
பூசணிக்காய் தோலை நீக்கிவிட்டு சிறு சதுர வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்து கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.
குக்கரில் பூசணிக்காய் துண்டுகளை போட்டு 1/2 கப் தண்ணீர், 1 சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு உடனே வெயிட்டை தூக்கி நீராவியை வெளியேற்றவும்.

அதே குக்கரில் அல்லது வேறொரு பாத்திரத்தில் இட்டு அடுப்பின் மீது வைத்து  மிதமான தீயில் சூடாக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஓரிரண்டு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கிள்ளி போடவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
Pumpkin Morekuzhambu
சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...




சில சமையல் குறிப்புகள் முயற்சிக்க :

மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு

morekuzhambu
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
கடப்பா
கடப்பா - இட்லிக்கு தொட்டுக்க
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு