#பகோடா : #வெங்காயபகோடா, காரம் வகைகளில் மிக பிரசித்தி பெற்றது. அதுவும் மாலை வேலையில் டீ அல்லது காபியுடன் சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான். ஆனால் வெங்காய விலை மிக மிக அதிகமாக இருந்ததால் சில காலங்களாக பகோடாவே மறந்து விட்டது. தற்போதுதான் விலை சிறிது கீழே இறங்கி வந்திரிக்கிறது அல்லவா? அதனால் பாப்பரை சக்கரை பொங்கல் செய்த அன்று அதனுடன் சுவைக்க வெங்காய பகோடா செய்தேன். இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
3/4 கப் கடலை மாவு
1/4 கப் அரிசி மாவு
1 வெங்காயம் நீள வாக்கில் மெல்லியதாக அரியவும்
1 குடை மிளகாய் மெல்லியதாக அரியவும்
1/2 கப் கொத்தமல்லி பொடியாக அரிந்தது
10 கருவேப்பிலை பொடியாக அரியவும்
1 பச்சை மிளகாய் பொடியாக அரியவும்
1/2 Tsp மிளகாய் பொடி
1/4 Tsp சீரகப்பொடி
1 Tsp சூடான எண்ணெய்
1/2 கப் எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்.
வெட்டிவைத்துள்ள அனைத்தையும் ஒரு பேசினில் எடுத்துக்கொள்ளவும்.
மிளகாய் பொடி சீரகபொடி மற்றும் உப்பு சேர்த்து பிசையவும்.
பிறகு மாவு மற்று சூடான எண்ணெய் சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் சின்ன சின்ன உருண்டைகளாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
முன்பே சொன்னது போல மாலை வேளையில் சூடான காபியுடன் அல்லது டீயுடன் சாப்பிட்டால் ம் ... ம் ... ஆஹா!... மிக மிக அருமையாக இருக்கும்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

|
|
|
|
|
No comments:
Post a Comment