Search This Blog

Showing posts with label amla chutney. Show all posts
Showing posts with label amla chutney. Show all posts

Saturday, January 17, 2015

Kothamalli-Nellikkai-Thayir-Chutney

#கொத்தமல்லிநெல்லிக்காய்தயிர்சட்னி : குளிர் காலத்தில் பச்சை #கொத்தமல்லி அதிக அளவில் கிடைக்கும். #கொத்தமல்லிதழை  வாசனைக்காக சமையலில் சேர்க்கப் படுகிறது. கொத்தமல்லியில் விட்டமின்களும் தாதுக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் c மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
அதனால் கொத்தமல்லியை நமது அன்றாட சமையலில் அதிக அளவில் எடுத்துக் கொள்வது நலம்.
நெல்லிக்காய் வைட்டமின் c அதிக அளவு நிறைந்துள்ள கனியாகும்.
இவ்விரண்டையும் உபயோகித்து ஒரு சுவையான சட்னி செய்வதெப்படி என காண்போம்.

கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி


தேவையான பொருட்கள் :
1 cupகொத்தமல்லி தழை 
2 or 3நெல்லிக்காய் [ Gooseberry - amla ]
1/3 cupகெட்டி தயிர்
7 to 8பச்சை மிளகாய்
8 to 10சின்ன வெங்காயம்
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு  [ adjust ]
1 to 2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]

செய்முறை :

  • தயிரை கரண்டி அல்லது மத்து கொண்டு கடைந்து வைக்கவும்.
  • நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தப் படுத்தி வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தின் தோலுரித்தது வைக்கவும்.
  • நெல்லிக்காயை இட்லி பானை அல்லது குக்கரில் [ வெயிட் பொருத்தாமல் ] ஆவியில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • வேக வைத்த நெல்லிக்காயின் கொட்டையை அகற்றவும்.
  • தயிர் மற்றும் எலுமிச்சை சாறு நீங்கலாக மிக்ஸியில் அனைத்தையும் அரைக்கவும்.
  • கடைசியாக தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • உப்பு சரி பார்க்கவும்.
  • சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி
இட்லி, தோசை, உப்புமா மற்றும் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் ஏற்ற சட்னி ஆகும்.
செய்து சுவைத்து பாருங்கள்!!




மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி








Wednesday, February 19, 2014

Nellikkai Chutney 1

#நெல்லிக்காய்சட்னி 1 : அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனியை நீடூழி வாழ அளித்த கதையை நாம் படித்திருக்கிறோம். இதிலிருந்து இக்கனியின் மகத்துவத்தை உணர முடிகிறது.
நெல்லிக்காயை பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Phyllanthus_emblica
இங்கு இக்கனியை கொண்டு சட்னி செய்வது எப்படி என பார்ப்போம்.

நெல்லிக்காய் சட்னி


தேவையான பொருட்கள் :
2 அ 3                                    நெல்லிக்காய்
1 Tsp                                      பச்சை கொத்தமல்லி விதை [ கிடைத்தால்]
4 Tsp                                      கொத்தமல்லி தழை அரிந்தது
1 Tsp                                      சீரகம்
சிறு துண்டு                         இஞ்சி [ விருப்பமானால்]
1 அ 2                                     பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 கப்                                    தயிர்
6 Tsp                                      தேங்காய் துருவல்
1 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]


தாளிக்க :
1/2 Tsp                                  கடுகு
1 Tsp                                     உளுத்தம் பருப்பு
8                                           கருவேப்பிலை
1 Tsp                                     எண்ணெய்
புதினா இலை அலங்கரிக்க

செய்முறை :
நெல்லிக்காயை இட்லி பானையிலோ அல்லது குக்கரிலோ ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொட்டையை நீக்கி விடவும்.
தயிர் நீங்கலாக மற்றையனைத்தையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.


அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதில் தயிரை நன்றாக கரண்டியால் கடைந்து சேர்க்கவும்.
அரைத்த பொருட்களையும் தயிரையும் நன்கு கலக்கி விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு, கருவேப்பிலை  மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.
புதினா கொண்டு அலங்கரிக்கவும்.

நெல்லிக்காய் சட்னி

சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்