Search This Blog

Showing posts with label kothamalli chutney. Show all posts
Showing posts with label kothamalli chutney. Show all posts

Saturday, January 17, 2015

Kothamalli-Nellikkai-Thayir-Chutney

#கொத்தமல்லிநெல்லிக்காய்தயிர்சட்னி : குளிர் காலத்தில் பச்சை #கொத்தமல்லி அதிக அளவில் கிடைக்கும். #கொத்தமல்லிதழை  வாசனைக்காக சமையலில் சேர்க்கப் படுகிறது. கொத்தமல்லியில் விட்டமின்களும் தாதுக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் c மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
அதனால் கொத்தமல்லியை நமது அன்றாட சமையலில் அதிக அளவில் எடுத்துக் கொள்வது நலம்.
நெல்லிக்காய் வைட்டமின் c அதிக அளவு நிறைந்துள்ள கனியாகும்.
இவ்விரண்டையும் உபயோகித்து ஒரு சுவையான சட்னி செய்வதெப்படி என காண்போம்.

கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி


தேவையான பொருட்கள் :
1 cupகொத்தமல்லி தழை 
2 or 3நெல்லிக்காய் [ Gooseberry - amla ]
1/3 cupகெட்டி தயிர்
7 to 8பச்சை மிளகாய்
8 to 10சின்ன வெங்காயம்
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு  [ adjust ]
1 to 2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]

செய்முறை :

  • தயிரை கரண்டி அல்லது மத்து கொண்டு கடைந்து வைக்கவும்.
  • நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தப் படுத்தி வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தின் தோலுரித்தது வைக்கவும்.
  • நெல்லிக்காயை இட்லி பானை அல்லது குக்கரில் [ வெயிட் பொருத்தாமல் ] ஆவியில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • வேக வைத்த நெல்லிக்காயின் கொட்டையை அகற்றவும்.
  • தயிர் மற்றும் எலுமிச்சை சாறு நீங்கலாக மிக்ஸியில் அனைத்தையும் அரைக்கவும்.
  • கடைசியாக தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • உப்பு சரி பார்க்கவும்.
  • சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி
இட்லி, தோசை, உப்புமா மற்றும் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் ஏற்ற சட்னி ஆகும்.
செய்து சுவைத்து பாருங்கள்!!




மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி








Sunday, August 10, 2014

Kothamalli Coconut Chutney

#கொத்தமல்லிதேங்காய்சட்னி : இன்று குதிரைவாலி இட்லியுடன் தொட்டுக்கொள்ள செய்த சட்னியின் செய்முறையை இங்கு காண்போம்.

கொத்தமல்லி தேங்காய் சட்னி


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        கொத்தமல்லி
1/3 கப்                                         தேங்காய் துருவல்
2                                                   சிகப்பு மிளகாய்
1/2 Tsp                                         கடுகு
2 Tsp                                            உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                         கொத்தமல்லி விதை
1/4 Tsp                                         பெருங்காய தூள்
1/2 Tsp                                         உப்பு
2 Tsp                                           எலுமிச்சை சாறு
1 Tsp                                           எண்ணெய்

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1/2 Tsp                                        உளுத்தம் பருப்பு
7                                                 கருவேப்பிலை
1 Tsp                                           எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகு சேர்த்து இலேசாக வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்ததும் வாணலியிலிருந்து எடுத்து தனியே வைக்கவும்.
மிக்ஸியில் வறுத்த பொருட்களுடன் மற்ற அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.


தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

மறுபடியும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்கவிட்ட பின் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து கடைசியாக கறுவேப்பிலை சேர்த்து வறுத்து சட்னியின் மேல் கொட்டவும்.

கொத்தமல்லி மணம் மூக்கை துளைக்குமே!

கொத்தமல்லி தேங்காய் சட்னி

ஆம்! சுவை மிகுந்த சட்னி தயார். இட்லி, தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் சுவைத்து சாப்பிட ஏற்ற சட்னியாகும்.







மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பிரண்டை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் பொடுதலை துவையல்
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Sunday, June 8, 2014

Coriander Chutney with Red Chilly

#கொத்தமல்லி சட்னி : நாம் கொத்தமல்லியை பெரும்பாலும் வாசனைக்காகவே சமையலில் பயன் படுத்துகிறோம். சில உணவுகளே கொத்தமல்லியை பிரத்தியேகமாக உபயோகித்து செய்யப்படுகிறது. ஆனால் கொத்தமல்லியில் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் A, B [B1, B2, B3, B5, B6 and folate ], C, E and K ஆகியவை நிறைந்துள்ளன.
இவை தவிர முக்கியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய அரிய சத்துக்கள் நிறைந்துள்ள கொத்தமல்லியை தினமும் நமது சமையலில் பயன் படுத்துவது அத்தியாவசியமாகும்.
இங்கு ஒரு சட்னி செய்முறையை காண்போம்.

கொத்தமல்லி சட்னி


தேவையான பொருட்கள் :


1 கப்                                     கொத்தமல்லி நறுக்கியது
4                                            சிகப்பு மிளகாய்
20 - 25                                    புதினா இலைகள்
சிறிய நெல்லி அளவு       புளி, நீரில் ஊறவைக்கவும்
1/4 Tsp                                  பெருங்காய தூள்
3/4 Tsp                                  உப்பு
1/2 Tsp                                  எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் சிகப்பு மிளகாயை வறுத்தெடுத்து மிக்ஸி பாத்திரத்தில் வைக்கவும்.
அடுப்பை நிறுத்தி விட்டு அதே சூட்டில் புதினாவை 2 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
கொத்தமல்லியில் உள்ள நீரே போதுமானது.
தேவையானால் சிறிது நீர் சேர்த்து அரைக்கலாம்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான மணமான கொத்தமல்லி சட்னி தயார்.

கொத்தமல்லி சட்னி

பொங்கல், உப்புமா, தோசை மற்றும் இட்லியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சாதத்திலும் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் மற்றும் பொரியலுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.





கொத்தமல்லியில் மற்ற சட்னி வகைகள்
கொத்தமல்லி விதை சட்னி கொத்தமல்லி புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி