Search This Blog

Showing posts with label cilantro. Show all posts
Showing posts with label cilantro. Show all posts

Saturday, March 29, 2014

Murungaikai Palakottai Kothamalli koottu

#முருங்கைக்காய்பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு : முருங்கைகாயும் பலகொட்டையும் சாம்பார்  மட்டுமல்ல கூட்டு செய்தாலும் மிக மிக ருசியாக இருக்கும். இந்த கூட்டை செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!..
இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு


தேவையான பொருட்கள் :


1                                                   : முருங்கைக்காய், துண்டுகளாக வெட்டவும்.
6                                                   :  பலாகொட்டை, நான்காக வெட்டவும்.
1 சிறியது                                 : பெரிய வெங்காயம்
3 பற்கள்                                    : பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/4 கப்                                         : கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு

அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1/4 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு

தாளிக்க :
1/2 Tsp                                        : வெங்காய வடவம்
1/2 Tsp                                        : எண்ணெய்

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


குக்கரில் அரிந்து வைத்துள்ளவற்றையும் மற்ற பொடிகளையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.


உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.


அரைத்து வைத்துள்ள தேங்காயையும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் சேர்க்கவும்.
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வடவத்தை தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு


சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

முன்பே கூறியது போல சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய் விட்டு பிசைந்து வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!.. ஊறுகாயுடனும் நன்றாக இருக்கும்.




மற்ற கூட்டு வகைகள் முயற்சி செய்து பார்க்க

முட்டைகோஸ் கூட்டு முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு

Sunday, January 19, 2014

Green Coriander Seeds Chutney

#பச்சைகொத்தமல்லிவிதைசட்னி : காய்கறி மார்க்கெட்டில் இருந்து இந்த கொத்தமல்லி விதைகளுடன் கூடிய கட்டு ஒன்று வாங்கி வந்தேன்.

பச்சை கொத்தமல்லி விதை

அதனால் தினமும் சமையலில் இந்த விதைகளை ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். அந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட சட்னி இது.

பச்சை கொத்தமல்லி விதை சட்னி

தேவையான பொருட்கள் :


3 Tsp                                    பச்சை கொத்தமல்லி விதைகள்
1/2 கப்                                கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
10 to 12                                பச்சை மிளகாய்
8 to 10                                  சின்ன வெங்காயம்
1/2 Tsp                                உப்பு

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸி பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.


வெங்காயம் மற்றும் மிளகாயின் தண்ணீர் சத்தே போதுமானதாக இருக்கும்.


தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
நன்கு காரமான கொத்தமல்லி வாசனையுடன் கூடிய சட்னி தயார்.

பச்சை கொத்தமல்லி விதை சட்னி

இட்லி மற்றும் தோசைகளுக்கு ஏற்ற சட்னியாகும்.





மற்ற சட்னி வகைகள்
கொத்தமல்லி சட்னி 1 கொத்தமல்லி புதினா துவையல் கொத்தமல்லி சட்னி 2

Green Coriander Seeds n Buckwheat Soup

#பாப்பரைசூப் 1 : பச்சை கொத்தமல்லி விதை மற்றும் பாப்பரை கொண்டு செய்யப்பட்ட #சூப். மாலை நடைப்பயிற்சிக்கு பிறகு சூடாக குடிப்பதற்காக தினமும் ஒரு  சூப் தயாரிப்பது வழக்கம். அந்த வரிசையில் தயாரிக்கப் பட்ட பாப்பரை சூப் பற்றி இங்கு பார்ப்போம்.

பாப்பரை சூப்

தேவையான பொருட்கள் :
2 Tbsp                                       வேகவைத்த பாப்பரை
1 Tsp                                         பச்சை கொத்தமல்லி விதை
3 Tsp                                         கொத்தமல்லி தழை
1 Tsp                                         காரட் பொடியாக நறுக்கியது
1                                               காளான் பொடியாக நறுக்கவும்
1/4 Tsp                                     உப்பு

Buckwheat - பாப்பரை 
மற்ற பொருட்கள்
வேகவைத்த பாப்பரை 
பச்சை கொத்தமல்லி விதைகள் 

சூப்பில் சேர்க்க :
மிளகுதூள், கொத்தமல்லி தழை  மற்றும் வறுத்த பூண்டு துகள்கள்

செய்முறை :
அடுப்பில் 1 கப் தண்ணீரை சூடாக்கவும். இலேசான சூடு வந்ததும் வேகவைத்த பாப்பரையை சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதித்த பிறகு காரட் துண்டுகளை சேர்க்கவும்.
காரட் முக்கால் பாகம் வெந்த பிறகு கொத்தமல்லி தழை மற்றும் விதையை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சூப்பில் சேர்க்கவும்.
கொதிக்கும் திரவம் சூப் தன்மையை அடைந்ததும் காளானை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்து காளான் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.

சூப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொத்தமல்லி தழை, மிளகுதூள் மற்றும் வறுத்த பூண்டு துகள்களை தூவி பருகவும்.

பாப்பரை சூப்

கொத்தமல்லி மனதுடன் அருமையான சூப் தயார்.

மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்ய
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்