Search This Blog

Sunday, January 19, 2014

Green Coriander Seeds n Buckwheat Soup

#பாப்பரைசூப் 1 : பச்சை கொத்தமல்லி விதை மற்றும் பாப்பரை கொண்டு செய்யப்பட்ட #சூப். மாலை நடைப்பயிற்சிக்கு பிறகு சூடாக குடிப்பதற்காக தினமும் ஒரு  சூப் தயாரிப்பது வழக்கம். அந்த வரிசையில் தயாரிக்கப் பட்ட பாப்பரை சூப் பற்றி இங்கு பார்ப்போம்.

பாப்பரை சூப்

தேவையான பொருட்கள் :
2 Tbsp                                       வேகவைத்த பாப்பரை
1 Tsp                                         பச்சை கொத்தமல்லி விதை
3 Tsp                                         கொத்தமல்லி தழை
1 Tsp                                         காரட் பொடியாக நறுக்கியது
1                                               காளான் பொடியாக நறுக்கவும்
1/4 Tsp                                     உப்பு

Buckwheat - பாப்பரை 
மற்ற பொருட்கள்
வேகவைத்த பாப்பரை 
பச்சை கொத்தமல்லி விதைகள் 

சூப்பில் சேர்க்க :
மிளகுதூள், கொத்தமல்லி தழை  மற்றும் வறுத்த பூண்டு துகள்கள்

செய்முறை :
அடுப்பில் 1 கப் தண்ணீரை சூடாக்கவும். இலேசான சூடு வந்ததும் வேகவைத்த பாப்பரையை சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதித்த பிறகு காரட் துண்டுகளை சேர்க்கவும்.
காரட் முக்கால் பாகம் வெந்த பிறகு கொத்தமல்லி தழை மற்றும் விதையை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சூப்பில் சேர்க்கவும்.
கொதிக்கும் திரவம் சூப் தன்மையை அடைந்ததும் காளானை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்து காளான் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.

சூப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொத்தமல்லி தழை, மிளகுதூள் மற்றும் வறுத்த பூண்டு துகள்களை தூவி பருகவும்.

பாப்பரை சூப்

கொத்தமல்லி மனதுடன் அருமையான சூப் தயார்.

மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்ய
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்


No comments:

Post a Comment