Search This Blog

Showing posts with label gravy. Show all posts
Showing posts with label gravy. Show all posts

Monday, April 14, 2014

Capsicum Kuruma

#குடைமிளகாய்குருமா : பொதுவாக #குடைமிளகாய் ரவா உப்புமா, பொரியல், பிரியாணி போன்ற உணவு வகைகளை செய்யும் போது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து உபயோகப் படுத்துவேன். இந்த முறை குடை மிளகாயையும் காளானையும் சேர்த்து குருமா போல செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

குடைமிளகாய் குருமா


தேவையான பொருட்கள் :
 1                                               குடை மிளகாய், துண்டுகளாகவும்
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்.
1 Tbsp                                        காரட் துண்டுகள்
4 அ 5                                        காளான், கழுவி துண்டுகளாக்கவும்.
1/2 Tsp                                       சீரகம்
3/4 Tsp                                       உப்பு
1 Tsp                                          எண்ணெய்
சிறிது                                       கொத்தமல்லி தழை அலங்கரிக்க

மசாலா அரைப்பதற்கு :
2 Tbsp                                      தேங்காய் துருவல்
2                                              பச்சை மிளகாய் [ தேவைக்கேற்ப ]
1 Tsp                                        சீரகம்
1 1/2 Tsp                                  கசகசா
3                                              முந்திரி பருப்பு
3 பற்கள்                                 பூண்டு
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்
1 Tsp                                        மிளகு [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
மசாலாவை மிக்சியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சீரகம் வெடிக்க விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
பிறகு காரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

காளான் துண்டுகளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குடைமிளகாய் குருமா

எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல வந்ததும் இறக்கி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

குடைமிளகாய் குருமா

பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குருமா வகைகள் முயற்சி செய்து பார்க்க

அவியல் கடப்பா காலிப்ளவர் தக்காளி குருமா




Sunday, April 13, 2014

Bajji Milagai Gravy

#பஜ்ஜிமிளகாய்கிரேவி : #பஜ்ஜிமிளகாய் விலை மலிவாக இருந்ததால் பஜ்ஜிக்கு தேவையானதை விட அதிகமாக இருந்தது. அதனால் தோசைக்கு தொட்டு கொள்ள இதனை உபயோகப்படுத்தி ஒரு குருமா செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.

பஜ்ஜி மிளகாய் கிரேவி


தேவையான பொருட்கள் :


10                                             பஜ்ஜி மிளகாய்
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்.
1 Tbsp                                       கொண்ட கடலை ஊறவைத்தது  [ இருந்தால் ]
2 Tsp                                         மணத்தக்காளி [ இருந்தால் ]
1                                                தக்காளி, சிறு துண்டுகளாக்கவும்.
1/2 Tsp                                       சீரகம்
3/4 Tsp                                       உப்பு
1 Tsp                                          எண்ணெய்
சிறிது                                       கொத்தமல்லி தழை அலங்கரிக்க

மசாலா அரைப்பதற்கு :
2 Tbsp                                      தேங்காய் துருவல்
2                                              பச்சை மிளகாய் [ தேவைக்கேற்ப ]
1 Tsp                                        சீரகம்
1 Tsp                                        கசகசா
3                                              முந்திரி பருப்பு
3 பற்கள்                                 பூண்டு
1 Tbsp                                      கொத்தமல்லி தழை நறுக்கியது [ இருந்தால் ]
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்

செய்முறை :
கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
மசாலாவையும் மிக்சியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகத்தை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து சிறுது வதக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி சேர்த்து வதக்கவும்.


இப்போது வேக வைத்த கொண்ட கடலை மற்றும் மணதக்காளியை சேர்த்து சிறிது வதக்கிய பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


மிளகாய் சிறிது மிருதுவானவுடன் மசாலாவை சேர்க்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
தண்ணீர் விட்டு மிக்ஸி பாத்திரத்தை கழுவி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
சிறிய தீயில் அனைத்தும் சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

பஜ்ஜி மிளகாய் கிரேவி

சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, புலாவ்,..... போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

மற்ற கிரேவி வகைகள்

காலிப்ளவர் தக்காளி குருமா காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி குடைமிளகாய் குருமா



Monday, February 24, 2014

Paneer Masala Curry

#பன்னீர்மசாலாகறி : எல்லா வகையான இரவு விருந்துகளிலும் இங்கு நான் வசிக்கும் ராய்ப்பூரில் கட்டாயமாக இந்த கறி இடம் பெற்றிருக்கும். ஆனால் எனக்கு இங்கு செய்யப்படும் #பன்னீர் மசாலா கறியின் சுவை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டது. அதனால் என்னுடைய முறைப்படி செய்தேன்.
மிக மிக அருமையாக இருந்தது. அதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பன்னீர் மசாலா கறி

தேவையான பொருட்கள் :
150 gm                                      பன்னீர், ஒரே மாதிரி சிறிய சதுரங்களாக வெட்டவும்
1 பெரிய அளவு                     வெங்காயம், பொடியாக அரியவும்
3 நடுத்தர அளவு                   தக்காளி, பொடியாக அரியவும்
10                                             கருவேப்பிலை
1/4 கப்                                      கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.

அரைக்க :
3  Tsp                                       தேங்காய் துருவல்
1/2 TSp                                    கசகசா
3                                              முந்திரி பருப்பு
1 Tsp                                        சீரகம்
2 பற்கள்                                  பூண்டு [ பிடிக்குமானால் ]

 தாளிக்க :
1/2 Tsp                                     சீரகம்
3 Tsp                                        எண்ணெய்

சேர்க்க வேண்டிய பொடிகள் :
1 Tsp                                       மிளகாய் தூள்
1/2 Tsp                                    சீரகத்தூள்
2 சிட்டிகை                            மஞ்சத்தூள்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் நன்கு மைய அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றையும் கழுவி அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடான பின் சீரகத்தை வெடிக்கவிட்டு மிளகாய்த்தூள் சேர்த்தவுடனேயே கொத்தமல்லி தழை சிறிது மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
அரை நிமிடம் வதக்கியபின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னேர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.


பச்சை வாசனை போனபின் பன்னீர் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


2 நிமிடம் கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
சிறிய தீயில் சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பன்னீர் மசாலா கறி

பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற கறியாகும்.
சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



மற்ற குருமா வகைகள் செய்து பார்க்க
காலிப்ளவர் தக்காளி குருமா காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி பஜ்ஜி மிளகாய் கிரேவி