#குடைமிளகாய்குருமா : பொதுவாக #குடைமிளகாய் ரவா உப்புமா, பொரியல், பிரியாணி போன்ற உணவு வகைகளை செய்யும் போது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து உபயோகப் படுத்துவேன். இந்த முறை குடை மிளகாயையும் காளானையும் சேர்த்து குருமா போல செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
தேவையான பொருட்கள் :
1 குடை மிளகாய், துண்டுகளாகவும்
1 வெங்காயம், துண்டுகளாக்கவும்.
1 Tbsp காரட் துண்டுகள்
4 அ 5 காளான், கழுவி துண்டுகளாக்கவும்.
1/2 Tsp சீரகம்
3/4 Tsp உப்பு
1 Tsp எண்ணெய்
சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க
மசாலா அரைப்பதற்கு :
2 Tbsp தேங்காய் துருவல்
2 பச்சை மிளகாய் [ தேவைக்கேற்ப ]
1 Tsp சீரகம்
1 1/2 Tsp கசகசா
3 முந்திரி பருப்பு
3 பற்கள் பூண்டு
1 வெங்காயம், துண்டுகளாக்கவும்
1 Tsp மிளகு [ விருப்பப்பட்டால் ]
செய்முறை :
மசாலாவை மிக்சியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சீரகம் வெடிக்க விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
பிறகு காரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
காளான் துண்டுகளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல வந்ததும் இறக்கி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மேலும் சில குருமா வகைகள் முயற்சி செய்து பார்க்க

No comments:
Post a Comment