சேனை கிழங்கு கார கறி : வெகு நாட்களுக்கு பிறகு இந்த கிழங்கை சமைக்கிறேன். இங்கு கிடைக்கும் கிழங்கு அரிப்புத் தன்மை அதிகமாக இருப்பதனால் வாங்குவதே இல்லை. திருமண விருந்தில் அநேகமாக இந்த கார கறி இடம் பெற்றிருக்கும். இந்த கறி செய்ய கிழங்கை வெட்டி வேகவைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்த பின் வெங்காயம் தக்காளி மற்றும் மசாலாக்களுடன் சேர்த்து கறி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு எண்ணெயில் பொரிக்காமல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
அடுப்பையும் மைக்ரோவேவ் அவனையும் உபயோகப் படுத்தியிருக்கிறேன்.
சேனையை தோல் நீக்கி ஒரே அளவு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இனி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 கப் சேனை துண்டுகள்
1 சிட்டிகை மஞ்சத்தூள்
1/4 Tsp மிளகாய்த்தூள்
1/2 Tsp உப்பு
கறி செய்ய :
1 சிறிய அளவு வெங்காயம்
1 தக்காளி
10 கருவேப்பிலை
சிறிது கொத்தமல்லி
1 சிட்டிகை மஞ்சத்தூள்
1/2 Tsp மிளகாய்த்தூள்
தாளிக்க :
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
2 Tsp எண்ணெய்
அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி.
செய்முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர், சேனை துண்டுகள், மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் பொருத்தி 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
நீராவியை உடனே நீக்கி தண்ணீரை வடித்து விட்டு ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
1/2 Tsp எண்ணெயை வெந்த கிழங்கின் மேல் விட்டு கலக்கவும்.
மைக்ரோவேவ் அவனில் 1 நிமிடம் சூடு பண்ணவும்.
வெளியே எடுத்து கலக்கி விட்டு ஒரு 1/2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
தண்ணீர் பசை போய் லேசாக வறுபட்ட நிலையில் இருந்தால் போதும்.
சிவக்க வரும் வரை மைக்ரோவேவில் வைத்தால் ரப்பர் போல ஆகிவிடும்.
மைக்ரோவேவ் செய்த கிழங்கை தனியே வைக்கவும்.
இப்போது அடுப்பில் வாணலியை சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிய பின் மஞ்சத்தூள், மிளகாய் தூள் சேர்த்தவுடன் வெங்காயம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் தக்காளிக்கு தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.
இந்த சமயத்தில் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு :

- இந்த கறி சிறப்பாக அமைய கிழங்கை சரியாக வேக வைப்பது மிக மிக அவசியம்.
- கிழங்கு அதிகமாக வெந்து விட்டால் தனித்தனியாக இல்லாமல் மாவு போல் மசிந்து விடும்.
- மைக்ரோவேவ் செய்ய வேண்டிய நேரம் எடுத்துக் கொள்ளும் கிழங்கின் அளவை பொருத்தது.
- மைக்ரோவேவ் இல்லையென்றால் வேக வைத்த பின் கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு மிளகாத்தூள் அளவை கூடி குறைத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment