Search This Blog

Showing posts with label vazhaipoo poriyal. Show all posts
Showing posts with label vazhaipoo poriyal. Show all posts

Thursday, September 15, 2016

Vazhaipoo-Mullangi-Poriyal

#வாழைப்பூமுள்ளங்கிபொரியல் : அறுசுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவையுடைய வாழைப்பூவை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலர் தவிர்த்து விடுகின்றனர். பருப்பு உசிலி செய்தால் அதன் சுவை சிறிது மட்டுப்படும். ஆனால் பருப்பு உசிலி செய்ய கூடுதல் நேரம் செலவாகும். இதனை மனதில் கொண்டு சில சுவை மிகுந்த காய்கறிகளான கேரட், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி போன்றவற்றுடன் வாழைப்பூவை சேர்த்து பொரியல் செய்து சுவைக்க ஆரம்பித்து விட்டேன். இதனால் இரு வேறு வகையான காய்கறிகளின் சத்தும் சுவையும் ஒருசேர நமக்கு கிடைக்கிறது.
இங்கு வாழைப்பூ, முள்ளங்கி மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றை உபயோகித்து பொரியல் செய்வதெப்படி என காணலாம்.

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்

தேவையானவை :
1/2 கப்வாழைப்பூ நறுக்கியது
3/4 கப்முள்ளங்கி துருவியது
1/8 கப்பயத்தம் பருப்பு
2 Tspகுடை மிளகாய் [ இருந்தால் ]
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கருவேப்பிலை [ விரும்பினால் ]
2பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
3/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி தழை

செய்முறை :
பொரியல் செய்ய துவங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பயத்தம் பருப்பை எடுத்து கழுவிய பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு முள்ளங்கி துருவலை சேர்த்து உப்பு போட்டு கலந்து தனியே வைக்கவும்.
முள்ளங்கியுடன் உப்புடன் சேர்த்து கலந்து வைத்திருப்பதால் நீர் விட ஆரம்பிக்கும்.
இந்த நீரில் பயத்தம் பருப்பு ஊறி விடும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பின் மீது வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு சேர்த்து வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்.
 அடுத்து கருவேப்பிலை மற்றும் நீளமாக கீறிய பச்சை மிளகாய் போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து வெங்காயம் வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து வெட்டி வைத்துள்ள குடை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் அதற்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட்ட பின் முள்ளங்கியை சிறிது கையால் பிழிந்து விட்ட பின் சேர்க்கவும்.
நன்கு கிளறி விட்ட பின்னர் ஒரு மூடி போட்டு மூடி  தீயின் மீது வேக விடவும்.

ஐந்து நிமிடங்களுக்குள்  வாழைப்பூவும் முள்ளங்கியும் வெந்து விடும்.
உப்பு சரி பார்த்த பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு உகந்த பொரியல் ஆகும்.

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Wednesday, October 15, 2014

Vazhaipoo-Poriyal

#வாழைப்பூபொரியல் : நாம் உண்ணும் உணவு ஆறு சுவைகளை உடையதாக இருக்க வேண்டும். ஆறு சுவைகள் யாதெனின் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவையாகும்.
இதில் துவர்ப்பு சுவையுடைய உணவுப் பொருட்கள் மிக சிலவே ஆகும்.
அதில் #வாழைப்பூ வும் ஒன்றாகும்.
இங்கு வாழைப்பூவை கொண்டு மிக எளிதான மேலும் துவர்ப்பு சுவை மேலோங்கியதான ஒரு பொரியல் செய்வதெப்படி என காணலாம்.

வாழைப்பூ பொரியல்


தேவையான பொருட்கள் :
1 கப்வாழைப்பூ பொடியாக நறுக்கியது 
3 Tspதேங்காய் துருவல் 
1/4 கப்வெங்காயம் வெட்டியது 
2 சிட்டிகைமஞ்சத்தூள் 
6 or 7கறுவேப்பிலை
1 or 2சிகப்பு மிளகாய்
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
1 Tspஎண்ணெய்



செய்முறை :
வாழைப்பூவின் நடுவே இருக்கும் காம்பை நீக்கி சுத்தப்படுத்தவும்.


சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர்க்க கரைத்த மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைக்கவும். இல்லாவிடின் கருத்து விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.
மஞ்சத்தூளையும் சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வெட்டி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும்.
தண்ணீர் சுண்டியவுடன் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

வாழைப்பூ பொரியல்

வாழைப்பூ பொரியல் தயார். சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் சுவைக்கவும்.




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ குழம்பு வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்