#தக்காளிசாம்பார் : இட்லி மற்றும் தோசைக்கு சாம்பார் மிக மிக அருமையான சைடு டிஷ் ஆகும். அதிலும் எப்போதும் செய்யும் சாம்பாரை விட தக்காளி கொண்டு செய்யும் சாம்பார் மிக ருசியாக இருக்கும்.
தக்காளி சாம்பாரை பருப்பு சேர்த்தும் அல்லது சேர்க்காமலும் செய்யலாம். எங்கள் இல்லத்தில் பருப்பு சேர்க்காமல் செய்யப்படும் தக்காளி சாம்பாரை தக்காளி சட்னி என்று குறிப்பிடுவது வழக்கம். பொதுவான பெயரை உபயோகிக்க எண்ணியே இந்த சாம்பாரை தக்காளி சாம்பார் என குறிப்பிட்டுள்ளேன்.
இங்கு பருப்பு சேர்க்காமல் செய்யப்படும் சமையல் குறிப்பை காண்போம்.
தேவையான பொருட்கள் :
3 பெரிய அளவு தக்காளி, பழச்சாறு எடுத்து வைக்கவும்.
1 பெரிய அளவு வெங்காயம், நறுக்கி வைக்கவும்.
3 பச்சை மிளகாய், இரண்டாக கீறி வைக்கவும்
1/4 அங்குல துண்டு இஞ்சி, நசுக்கிகொள்ளவும்.
12 கருவேப்பிலை
1/4 கப் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
தேவையான பொடிகள் :
2 சிட்டிகை மஞ்சத்தூள்
1/4 Tsp சிகப்பு மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1 Tsp குவித்து சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp அரைத்துவிட்ட குழம்பு மிளகாய் தூள்
1 1/4 Tsp உப்பு [அட்ஜஸ்ட்]
தாளிக்க :
1/2 Tsp கடுகு
2 Tsp கடலை பருப்பு
1/4 Tsp பெருங்காய தூள்
2 Tsp எண்ணெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடேறியதும் கடுகை வெடிக்க விட்டு பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்தவுடன் மஞ்சத்தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்.
உடனேயே கருவேப்பிலை, பாதி கொத்தமல்லி தழை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சாம்பார் மிளகாய் தூளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.
இப்போது தக்காளி பழக்கூழை சேர்க்கவும்.
1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
தீயை அதிக படுத்தி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை நன்கு குறைத்து விடவும்.
5 நிமிடங்கள் அடுப்பில் கொதித்து கொண்டே இருக்கட்டும்.
கடைசியாக அரைத்து விட்ட குழம்பு பொடியை தூவி உப்பு சரி பார்க்கவும்.
மேலும் 2 நிமிடங்கள் கொதித்த பின் மீதமுள்ள கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும்.
அருமையான தக்காளி சாம்பார் தயார். வாசனை மூக்கை துளைக்குமே!
இன்னும் ஏன் காத்து கொண்டிருக்கிறீர்கள்!
இட்லியை தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ வைத்து அதன் மேல் இரண்டு கரண்டி தக்காளி சாம்பார் விடவும். 1 Tsp நல்லெண்ணெய் விட்டு சுவைக்கவும்.
ஆ!! ஆஹா!!.... என்ன சுவை!! என்ன சுவை!! இன்னும் இட்லி வேணுமா??!!..
மற்றுமொரு முறை :

No comments:
Post a Comment