Search This Blog

Thursday, November 5, 2015

Amaranth-Buckwheat-Paruppu-Payasam

#அமராந்த்பாப்பரைபருப்புபாயசம் : 

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

#அமர்நாத்விதைகள் ( அ )  
#அமராந்த் என்பது ஒரு கீரையின் விதையாகும். இதனை #அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

அமராந்தம் போலவே #பாப்பரை யும் புரதம் அதிக அளவில் கொண்டுள்ள ஒரு விதையாகும். அதனால் அடிக்கடி இவ்விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நலமாகும்.
இவ்விரு விதைகளுடன் பயத்தம் பருப்பையும் சேர்த்து ஒரு சுவையான பாயசம் செய்வது எப்படி என காணலாம்.

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள் :
1 Tbspஅமராந்தம்
1 Tspபாப்பரை [ Buckwheat ]
1/8 cupபயத்தம் பருப்பு
2 or 3முந்திரி பருப்பு வறுத்தது
1/2 Cupவெல்லம் [ adjust ]
1 pinchஉப்பு
அரைக்க :
1 Tbspதேங்காய் துருவல்
1/2 Tspகசகசா
2ஏலக்காய்
சிறுதுண்டுஜாதிக்காய்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸி அரைக்கும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிய தீயில் சூடாக்கவும்.
அதில் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அமராந்த், பாப்பரை மற்றும் வறுத்த பருப்பு அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை தண்ணீரில் கழுவி வடித்து விடவும்.
பிறகு 3/4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வந்த பிறகு சிறிய தீயில் 3 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து வெந்த பருப்பு, அமராந்த், மற்றும் பாப்பரை ஆகியவற்றை ஒரு குழி கரண்டி கொண்டோ அல்லது உருளைகிழங்கு மசிக்கும் மத்தை கொண்டோ மசிக்கவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி கரைய வைக்கவும்.
வெல்லம் கரைந்த வுடன் அடுப்பிலிருந்து எடுத்து வடி கட்டவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் மசித்து வைத்துள்ளதை சேர்த்து கலக்கவும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
சிறிய தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒன்றாக சேர்ந்து வந்ததும் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் ஜாதிக்காய் பொடியை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


Amaranth Buckwheat Paruppu Payasam


பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி வறுத்த முந்திரியை தூவி பருகவும்.
சுவையும் சத்தும் மிகுந்த அமராந்த் பாப்பரை பாயசம் தயார்.

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்






மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்

காரட் தினை பாயசம் சாமை பாப்பரை பாயசம் அமராந்த் பாப்பரை பால் பாயசம்
குதிரைவாலி பால் பாயசம் ஜவ்வரிசி சேமியா பாயசம்

No comments:

Post a Comment