Search This Blog

Tuesday, January 21, 2014

Sego Semiya Payasam

#ஜவ்வரிசிசேமியாபாயசம் : மிகவும் எளிதான பாயசம். கல்யாண விருந்து, பண்டிகை நாட்களில் எல்லோராலும் செய்யப்படும் பாயசம் இதுவாகத்தான் இருக்கும். சுவையானதும் கூட. சேமியா கொண்டு தனியாகவும் பாயசம் செய்யலாம். ஜவ்வரிசி சேர்த்தும் செய்யலாம். ஜவ்வரிசியுடன் சேர்த்து செய்யும் போது இன்னும் சுவை கூடுதலாக அருமையாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு  சுமார் 1 கப் பாயசம்  செய்யலாம்.

ஜவ்வரிசி சேமியா பாயசம்

தேவையான பொருட்கள் :
1 Tbsp                                             ஜவ்வரிசி
1 Tbsp                                              சேமியா வறுத்தது
1 கப்                                               பால்
1 சிட்டிகை                                  உப்பு
1 1/2 Tbsp                                        சர்க்கரை
4                                                       குங்கும பூ
2 Tsp                                                பாதாம் துருவியது

வாசனைக்கு ஏலக்காய் தூள் அல்லது வெனிலா எஸ்சென்ஸ் உபயோகிக்கலாம்.

செய்முறை :

இங்கு சாதாரண ஜவ்வரிசியே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
ஜவ்வரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.


15 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் 1 1/4 கப் பாலை சூடு பண்ணவும்.
பால் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்க்கவும்.
குறைந்த தீயில் வேக விடவும்.
ஜவ்வரிசி மிருதுவாக  வெந்தவுடன் சேமியாவை சேர்க்கவும்.
சேமியா ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் வெந்து விடும்.
இப்போது சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
குங்குமப்பூ சேர்த்து 5 நிமிடங்கள் சிறிய தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான ஜவ்வரிசி சேமியா பாயசம் தயார்.

ஜவ்வரிசி சேமியா பாயசம்


கிண்ணத்தில் ஊற்றி பாதாம் துகள்களை தூவி பரிமாறவும்.
அல்லது முந்திரி மற்றும் கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து அலங்கரிக்கவும்.

ஜவ்வரிசி சேமியா பாயசம்


குறிப்பு :
நயிலான் ஜவ்வரிசியாக இருந்தால் நெய்யில் பொறியும் அளவுக்கு வறுத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

Roasted semiya n nylon sego Payasam



மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்  அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

காரட் தினை பாயசம் சாமை பாப்பரை பாயசம் அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம் குதிரைவாலி பால் பாயசம் அமராந்த் பாப்பரை பாயசம்

1 comment: