Search This Blog

Sunday, March 23, 2014

Kuthiraivaali Paal Payasam

#குதிரைவாலிபால்பாயசம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகையைச் சேர்ந்தது.
இதனை ஆங்கிலத்தில் Barnyard Millet என அழைக்கிறார்கள்.
அரிசி மற்றும் கோதுமையை விட இத்தானியத்தில் நார் சத்து மிக அதிகம்.

குதிரைவாலி


இதன் அறிவியல் பெயர் : Echinochloa Frumentacea

இந்த சிறு தானியங்கள் மழை குறைவான பகுதியிலும், எல்லா வகையான மண்ணிலும் வளரக் கூடியது. மற்றும் குறைவான நாட்களிலேயே தானியங்கள் அறுவடை செய்யக்கூடியதும் ஆகும். இவ்வகை சிறு தானியங்கள் வைட்டமின் மற்றும் உலோக சத்து மிகுந்தது.
இங்கு இதனை கொண்டு பாயசம் செய்வதெப்படி என பார்க்கலாம்.

குதிரைவாலி பால் பாயசம்

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி                : 1/8 கப் 
பால்                                            : 1 1/2 Cup
உப்பு                                            : 1 சிட்டிகை
சர்க்கரை                                   : 3 Tbsp ( அட்ஜஸ்ட் )
ஏலக்காய்                                  : 2 அ 3, சிறிது பொடித்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ                               : 4 அ 5 இழைகள்
முந்திரி                                       : 4 அ 5

செய்முறை :
குதிரைவாலி  அரிசியை நன்கு கழுவி ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கெரில் வேக வைக்கவும்.
3 விசிலடித்தவுடன் தீயை சிறியதாக்கி 3 நிமிடங்களுக்கு வேக விடவும்.
ஆவி அடங்கியவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.


முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் பாலை வைத்து கொதித்தவுடன் வெந்த குதிரைவாலி அரிசியை போட்டு கலக்கவும்.
அடுப்பை சிறிய தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பின் சர்க்கரையையும் உப்பையும் கலக்கவும்.
குங்கும பூ இழைகளையும் ஏலக்காயையும் சேர்க்கவும்.


மேலும் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
அடுப்பை அனைத்து விட்டு பரிமாறும் கிண்ணங்களுக்கு மாற்றவும்.
முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை கொண்டு அலங்கரிக்கவும்.


குதிரைவாலி பால் பாயசம்



மேலும் சில சமையல் குறிப்புகள்
வரகரிசி தேங்காய் பாயசம் குதிரைவாலி வாழைப்பூ புலாவ் குதிரைவாலி புளியோதரை



No comments:

Post a Comment