#தினைமாவுதோசை : தினை #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. சிறு தானியங்கள் வகைகளில் தினை மிக பழங்காலம் முதற் கொண்டு தமிழகத்தில் உணவாக உட்கொள்ளப்ப.டுகிறது. இத் தானியம் சிறு சிறு கோள வடிவத்தில் காணப்படுகிறது. தக தகவென தங்க நிறத்தை கொண்டுள்ளது. இரும்பு, செம்பு, துத்தநாகம் ஆகிய தாதுக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. தினை கொண்டு சில சமையல் குறிப்புகளை முன்பே பார்த்திருக்கிறோம்.
இங்கு தோசை செய்வது எப்படி என காண்போம்.
செய்முறை :
உப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று முறை நன்கு கழுவிய பின் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை கழுவவும்.
பிறகு ஊறவைத்த அனைத்தையும் இயந்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றிய பின் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டியிருப்பதை கழுவி மாவுடன் சேர்க்கவும்.
ஆறு முதல் எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
புளித்த பிறகு அடுப்பில் தோசை கல்லை மிதமான சூட்டில் சூடாக்கி எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை நடுவில் வைத்து சமமாக பரப்பவும்.
தோசையின் மேலும் சுற்றியும் சிறிது எண்ணெய் விடவும்.
ஒரு மூடி கொண்டு மூடவும்.
ஓரம் மற்றும் நடுவில் சிவந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
திருப்பி போட்டு வேக விட தேவையில்லை.
மொறு மொறு தோசை வேண்டும் எனில் மெல்லியதாக பரப்பி எண்ணெய் விட்டு மூடி சுட்டெடுக்கவும்.
விருப்பமான சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைக்கவும்.
இங்கு தோசை செய்வது எப்படி என காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 கப் | இட்லி அரிசி |
1/2 கப் | தினை அரிசி |
1/2 கப் | பச்சரிசி |
1 Tsp | வெந்தயம் |
1/2 கப் | உளுத்தம் பருப்பு |
2 Tsp | உப்பு |
செய்முறை :
உப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று முறை நன்கு கழுவிய பின் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை கழுவவும்.
பிறகு ஊறவைத்த அனைத்தையும் இயந்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றிய பின் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டியிருப்பதை கழுவி மாவுடன் சேர்க்கவும்.
ஆறு முதல் எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
புளித்த பிறகு அடுப்பில் தோசை கல்லை மிதமான சூட்டில் சூடாக்கி எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை நடுவில் வைத்து சமமாக பரப்பவும்.
தோசையின் மேலும் சுற்றியும் சிறிது எண்ணெய் விடவும்.
ஒரு மூடி கொண்டு மூடவும்.
ஓரம் மற்றும் நடுவில் சிவந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
திருப்பி போட்டு வேக விட தேவையில்லை.
மொறு மொறு தோசை வேண்டும் எனில் மெல்லியதாக பரப்பி எண்ணெய் விட்டு மூடி சுட்டெடுக்கவும்.
விருப்பமான சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைக்கவும்.
முயற்சி செய்ய சில சமையல் குறிப்புகள் :
|
|
|
||||||
|
|
பலகாரங்கள்