#ஆப்பம்கேரளாஸ்டைல் 1 : பொதுவாக தமிழகத்தில் செய்யப்படும் ஆப்பம் அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து புளிக்க வைத்த மாவு கொண்டு செய்யப்படும் ஒரு பலகாரமாகும். மேலும் ஆப்பத்தின் மேலே தேங்காய் பாலை ஊற்றி அல்லது தொட்டுக்கொண்டு சாப்பிடுவது நமது முறையாகும்.
ஆனால் கேரளாவில் ஆப்பம்-கடலை கறி மிகவும் பிரபலமாகும். மேலும் ஆப்ப மாவு பச்சரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை மட்டுமே உபயோகித்து செய்யப்படுகிறது.
இங்கு கேரளா முறைப்படி ஆப்ப மாவு அரைத்தெடுப்பது எப்படி என்றும் ஆப்ப சட்டியில் எவ்வாறு சுட்டெடுப்பது என்றும் பார்ப்போம்.
ஆனால் கேரளாவில் ஆப்பம்-கடலை கறி மிகவும் பிரபலமாகும். மேலும் ஆப்ப மாவு பச்சரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை மட்டுமே உபயோகித்து செய்யப்படுகிறது.
இங்கு கேரளா முறைப்படி ஆப்ப மாவு அரைத்தெடுப்பது எப்படி என்றும் ஆப்ப சட்டியில் எவ்வாறு சுட்டெடுப்பது என்றும் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 1/2 கப் | பச்சரிசி |
1/4 கப் | சாதம் [ வேகவைத்த அரிசி ] |
1/2 கப் | தேங்காய் துருவல் |
1 Tsp | உப்பு |
1 Tsp | சர்க்கரை |
1 சிட்டிகை | சமையல் சோடா |
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி, தேங்காய் துருவல் மற்றும் சாதம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை ஆப்பம் தயாரிக்கலாம்.
ஆப்ப சட்டியை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு தேக்கரண்டி தண்ணீரில் சமையல் சோடாவை கலக்கி ஆப்ப மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.
ஆப்ப சட்டி சூடானதும் ஒரு சுத்தமான துணியை எண்ணெயில் நனைத்து ஆப்ப சட்டியில் தடவும்.
ஆப்ப சட்டி சூடானதும் நடுவில் மாவை ஊற்றி ஆப சட்டியில் கைப்பிடியை துணியினால் பிடித்து கொண்டு சுழற்றி மாவை பரப்பவும்.
ஆப்ப மாவு ஆப்ப சட்டியின் சூட்டில் நன்கு ஒட்டிக்கொள்ளும்.
அடுப்பின் மீது வைத்து ஓரிரு துளிகள் எண்ணெயை ஆப்பத்தின் ஓரத்தில் சொட்டு சொட்டாக விடவும்.
அடுப்பின் மீது வைத்து ஓரிரு துளிகள் எண்ணெயை ஆப்பத்தின் ஓரத்தில் சொட்டு சொட்டாக விடவும்.
அடுத்து மூடியினால் மூடவும்.
ஓரிரு நிமிடங்களில் மூடியை திறந்து பார்த்தால் ஆப்பம் வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
கத்தியின் நுனி கொண்டோ அல்லது தோசை திருப்பியினாலோ ஆப்ப சட்டியிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.
இந்த ஆப்பத்திற்கு கொண்டை கடலை கொண்டு செய்யப்படும் கறிதான் நல்ல இணையாகும்.
பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி சட்னியுடனும் நன்றாக இருக்கும்.
குறிப்பு :
மாவு நீர்க்க இருக்க வேண்டும். அப்போதுதான் ஆப்பம் மெல்லியதாக வரும்.
தேவையானால் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
மற்ற ஆப்ப வகைகளின் சமையல் குறிப்புகள் :
|
|
|
|
தொட்டுக்க