Search This Blog

Showing posts with label samaiarisi upma. Show all posts
Showing posts with label samaiarisi upma. Show all posts

Monday, October 13, 2014

Samai Arisi Upma

#சாமைஅரிசிஉப்புமா : #சாமைஅரிசி சிறு தானிய வகைகளிலேயே மிக மிக சிறிய மணிகளை கொண்டது. அதனால் இதனை ஆங்கிலத்தில் Little Millet என அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் Panicum miliare ஆகும்.
#சிறுதானியம் வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இந்த சிறு தானியங்களின் சுவை அரிசியை போலவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அரிசியை விடவும் அருமையாக இருக்கிறது.

இத் தானியங்களின் மணிகள் மிக சிறியதாக இருப்பதனால் கற்கள் மற்றும் மண் அதிக அளவில் காணப்படுகிறது. சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் களைந்த பின்னர் இரண்டு முறை அரித்து எடுத்துக்கொள்வது நல்லது.

இனி செய்முறையை பார்ப்போம்.

சாமை அரிசி உப்புமா


தேவையான பொருட்கள் :
1 கப்சாமை அரிசி
2 Tspஉப்பு
1 வெங்காயம்
3 பச்சை மிளகாய்
10 - 15கருவேப்பிலை
சிறு துண்டுஇஞ்சி
தாளிக்க :
1 Tspகடுகு
4 Tspகடலை பருப்பு
சிறு துண்டுபெருங்காயம்
4 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
சாமை அரிசியை இரண்டு முறை களைந்து பின்னர் கல் போக இரண்டு முறை அரித்தெடுக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு ஆற விடவும்.

சாமை அரிசி

அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.

எண்ணெய் காய்வதற்குள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி வைக்கவும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது நசுக்கி வைக்கவும்.


எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.



வெங்காயம் வாசனை வர ஆரம்பித்து இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.


தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்துள்ள சாமை அரிசியை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் அதிக தீயில் கொதிக்க விட்ட பின்னர்
தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.

சாமை அரிசி வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.


வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படியே மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் தேங்காய் சட்னியுடன் அல்லது புதினா துவையல் / கறுவேப்பிலை துவையலுடன் பரிமாறவும்.

சாமை அரிசி உப்புமா

எனக்கு எல்லா வகையான உப்புமாவையும் வெல்லத்துடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். 


மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா