Search This Blog

Monday, November 18, 2013

Spinach Sorghum Stirfry

பசலை கீரை சோளம் வதக்கல் : சோளம் சிறுதானிய வகையில் ஒன்றாகும். இத்தானியம் ஆங்கிலத்தில் Sorghum என்று அழைக்கப்படுகிறது. சோளம் பரவலாக எல்லாராலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் சோளமாவை ரொட்டி தயாரிக்க பயன் படுத்துகிறார்கள். நான் பொதுவாக சோள  மாவை பயன் படுத்தி தோசை தயாரிப்பேன். தற்போதுதான் முழு தானியமாக பயன் படுத்த துவங்கியுள்ளேன். இந்த தானியம் வேக சிறிது நேரமாகும். வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பிறகு தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
1 Cup சோளத்திற்கு 2 Cup தண்ணீர் சரத்து வேக வைக்க வேண்டும்.
குக்கரில் 3 விசில் வந்தவுடன் சிறிய தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
நன்றாக மலர்ந்து வெந்து இருக்கிறதா என்று பார்க்கவும்.
இல்லையென்றால் மீண்டும் ஒரு 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.


தேவையான பொருட்கள் :
வேகவைத்த சோளம்     : 1 Cup
கடுகு                                     : 1/2 Tsp
கடலை பருப்பு                  : 1 Tsp
நிலக்கடலை                     : 2 Tsp
பெருங்காய தூள்             : 2 சிட்டிகை
சிகப்பு மிளகாய்                : 1 ( அட்ஜஸ்ட் )
பசலை கீரை                      : 1 Cup

பெரிய வெங்காயம்         : 1 சிறியது
காரட் துண்டுகள்              : 2 Tsp
நல்லெண்ணெய்              : 2 Tsp
மிளகுத்தூள்                        : 1/2 Tsp 

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விடவும்.
கடுகை தாளிக்கவும். கடுகு பட பட என பொரிந்தவுடன் கிள்ளிய சிகப்பு மிளகாய், கடலை பருப்பு பிறகு நிலக்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
 காரட் துண்டுகள் மற்றும்  கழுவி வெட்டி வைத்துள்ள கீரையையும் சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.
கீரை லேசாக வெந்தவுடன் வேகவைத்த சோளத்தை சேர்க்கவும்.


தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.


இப்போது பசலை கீரை சோள வதக்கல் தயார்.


மாலை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடலாம்.

குறிப்பு : கீரை மற்றும் கரத்தின் அளவை அவரவர் விருப்பப்படி கூட்டி குறைத்துக்கொள்ளவும்.



 


No comments:

Post a Comment