Search This Blog

Wednesday, May 13, 2020

Kallappam

#கள்ளாப்பம் : இந்த சிற்றுண்டி கேரளாவில் செய்யப்படும் ஒரு உணவாகும். இது ஆவியில் வேகவைத்தெடுக்கப்படும் ஆப்ப வகைகளுள் ஒன்றாகும். நம்மிடம் எப்போதும் கையிலிருக்கும் அரிசி மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்படும் மிகவும் எளிய வகை உணவு. செய்வதும் மிக மிக எளிது.
மாவை புளிக்க வைக்க வேண்டுமாதலால் முன் கூட்டியே திட்டமிடல் அவசியம்.

கள்ளாப்பம் [ Kallappam ]

தேவையானவை  :
2 cups                                  பச்சரிசி 
2/3 cup                                 சாதம் 
3/4 cup                                 தேங்காய் துருவல்
1 Tbsp                                  சர்க்கரை
1 Tsp                                    உப்பு [ Adjust ]
1 Tbsp                                  உலர்ந்த ஈஸ்ட் [ Dry yeast ]*
1 or 2                                   பதப்படுத்திய அத்தி, நறுக்கிக்கொள்ளவும்
அல்லது உலர் திராட்சை, உலர் பேரீச்சை போன்றவற்றையும் பயன் படுத்தலாம்.
*குறிப்பு : உலர்ந்த ஈஸ்ட் [ Dry yeast ] கிடைக்கவில்லையெனில் புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு வையும் உபயோகப்படுத்தலாம்.

செய்முறை :
மறுநாள் காலை உணவுக்கு முதல் நாள் மதியமே மாவு தயாரிக்க திட்டமிட வேண்டும்.
மதிய உணவு சமைக்கும் போது சிறிது கூடுதலாக அரிசி போட்டு சாதம் சமைக்கவும். சமைத்த சாதத்திலிருந்து 2/3 கப் சாதத்தை தனியே எடுத்து வைக்கவும்.
பச்சரிசியை ஒரு பாத்திரத்தில் இட்டு இரு முறை கழுவிய பின்னர் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணிநேரம் ஊறிய பின்னர் மிக்சியில் ஊறிய அரிசி, சாதம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ஈஸ்ட்டை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து மாவுடன் சேர்க்கவும்.
[ ஈஸ்ட் இல்லையெனில் புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு சேர்த்துக்கொள்ளவும். ]
அத்துடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மூடி வைக்கவும்.
ஆறு முதல் எட்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்கவிடவும்.


குறிப்பிட்ட நேரம் புளிக்க வைத்த மாவு நன்கு உப்பி வந்திருக்கும்.
அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
ஒரு ஆழமான தட்டை எடுத்து நல்லெண்ணெய் தடவி வைக்கவும்.



எண்ணெய் தடவிய தட்டில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி நிரப்பவும்.



மாவின் மீது உலர்ந்த அத்தி துண்டுகளை தூவி விடவும்.



இட்லி பானையினுள் வைத்து மூடி போட்டு ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.


10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சுத்தமான கத்தியை வெந்த ஆப்பத்தினுள் செருகி பார்க்கவும்.
கத்தியின் மீது மாவு ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
அந்த தட்டை இட்லி பானையிலிருந்து வெளியில் எடுத்து வைத்து 5 நிமிடங்கள் ஆற விடவும்.



பிறகு ஒரு தேக்கரண்டியினால் ஓரத்தை சிறிது விலக்கி தட்டிலிருந்து எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.

கள்ளாப்பம் [ Kallappam ]

சுத்தமான கத்தி கொண்டு துண்டுகள் போடவும்.


தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.


அல்லது அவரவர்க்கு பிரியமான கார சட்னி யுடன் சுவைக்கலாம்.






மேலும் சில சிற்றுண்டிகள் செய்து பார்த்து ருசிக்க :
Masaal dosai
மசால் தோசை 
Mudakattan keerai dosai
முடக்கத்தான் கீரை தோசை 
Appam
ஆப்பம் 
Appam Kerala style
ஆப்பம் கேரளா முறையில்
Kuthiraivaali neer dosai
குதிரைவாலி நீர் தோசை 

மற்றும் பல சிற்றுண்டி வகைகளுக்கு 

டிபன் வகைகள்


Friday, March 20, 2020

Barnyard-Millet-Fried-Rice

#குதிரைவாலிகாய்கறிசாதம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. மற்ற சிறுதானியங்களை போன்று குதிரைவாலியும் அமிலத்தன்மை அற்றது. மேலும் பசைத்தன்மையும் அறவே இல்லாதது.
குதிரைவாலியில் புரதம் மற்ற தானியங்களை காட்டிலும் அதிக அளவிலும் மேலும் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் உள்ளது.
நார்ச்சத்தும் இரும்பு சத்தும் அதிகமாக உள்ள சிறுதானியமாகும். இதன் glycemic index குறைவானதாக இருக்கிறது. அதனால் இரத்தத்தில் சேரும் குளுகோஸ் அளவும் குறைவாகவே இருக்கிறது.
இத்தகைய மருத்துவ பயன்களை அடங்கியுள்ள குதிரைவாலியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது மிகமிக அவசியமானது.


தேவையானவை
1/2 கப்குதிரைவாலி [ Barnyard millet ]
1 Tspசீரகம்
1/2 Tspமிளகு இடித்தது
1 Tspமிளகு பொடி [ adjust ]
1 big sizeவெங்காயம், நறுக்கவும்
1 or 2பச்சை மிளகாய் [ adjust ]
10 - 15பூண்டு பற்கள், நறுக்கவும்
2 - 3 Tbspபச்சை பட்டாணி
காரட், பொடியாக நறுக்கவும்
1/2 Cupகொத்தமல்லி தழை நறுக்கியது
4 Tspநல்லெண்ணெய் [ Til/Sesame oil ]
1 Tspநெய் [ optional ]
1/2 Tspஇஞ்சித் துண்டுகள் [ optional ]
செய்முறை :
குதிரைவாலியை ஓரிரு முறை நன்கு கழுவிய பின்னர் 1 கப் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து 2/3 லிட்டர் குக்கரில் ஊறவைத்த தண்ணீருடன் குதிரைவாலியை இட்டு மூடி வெயிட் பொருத்தி மிக அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கரின் ஆவி அடங்கியபின் குக்கரை திறந்து ஒரு வாயகல பாத்திரத்தில் வெந்த குதிரைவாலியை கொட்டி 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு மின் விசிறியின் அடியில் உதிர் உதிராக வரும் வரை ஆற விடவும்.
அடுப்பின் மீது எண்ணெய் சட்டியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகத்தை போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து இரண்டாக பிளந்த பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு நறுக்கிய கேரட் மற்றும் பச்சை பட்டாணியை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து இடித்த மிளகு, உப்பு, நெய், மிளகு பொடி  மற்றும் நறுக்கிய கொத்தமல்லி போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது தீயை அதிகமாக்கி ஆற வைத்துள்ள குதிரைவாலியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிடித்தமான குருமா/மசாலா குழம்பு டன் சுவைத்து மகிழவும்.






மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலி நீர் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி சர்க்கரை பொங்கல்
குதிரைவாலி சர்க்கரை
குதிரைவாலி பாயசம்
குதிரைவாலி பாயசம்

குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

குதிரைவாலி சமையல்



சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்



Monday, December 3, 2018

Karunai-kizhangu-Chutney

#கருணைக்கிழங்குசட்னி :  #கருணைக்கிழங்கு சட்னியை #கருணைக்கிழங்குகுழம்பு அல்லது #கருணைக்கிழங்குபுளிகுழம்பு என்றும் கூறலாம். இந்த குழம்பு செய்வதற்கு பருப்பு வேகவைத்து சேர்க்க வேண்டிய தேவையில்லை. இது கத்தரிக்காய் சட்னி  போன்ற சுவையுடைய ஒரு குழம்பு ஆகும்.
கிழங்கை நன்கு வேகவைத்த பின்னர் தோலை நீக்கி நன்கு மசித்து விட வேண்டும். மசித்த கிழங்குடன் சாம்பார் பொடி, மல்லித்தூள், அரைத்துவிட்ட குழம்பு தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை கடுகு, கருவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் மற்றும் பெருங்காயத்துடன் வதக்கி கிழங்கு கலவையுடன் சேர்க்க வேண்டும். புளியை கரைத்து விட்டு நன்கு கலக்கி இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகவைத்து எடுத்தால் சுவையான கருணைக்கிழங்கு சட்னி தயார்.
இனி தேவையான பொருட்களின் அளவுகள் மற்றும் செய்முறையை காண்போம்.



தேவையானவை :
2 ( அ ) 3கருணைக்கிழங்கு
சிறு நெல்லிக்காய் அளவு புளி
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 - 12சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 - 3பச்சை மிளகாய்
10 - 12கறுவேப்பிலை
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1 Tspகடலை எண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]
2 pinchesமஞ்சத்தூள்
2 Tspசாம்பார் பொடி
1 Tspஅரைத்துவிட்ட குழம்பு தூள்
1 Tspகொத்தமல்லித்தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
கருணைக்கிழங்கை மண் போக  நன்கு கழுவிய பின்னர் குக்கரில் போடவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1/4 Tsp உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும். அல்லது ஒரு விசில் வந்த பின்னர் தீயை குறைத்து 7 நிமிடம் வேகவைக்கவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கியோ அல்லது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து தண்ணீரை ஊற்றியோ உடனே ஆவியை வெளியேற்றவும்.
வெந்த கிழங்கை குக்கரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
குக்கரிலுள்ள வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டி விடவும்.
கிழங்கின் தோல் நீக்கி குக்கரினுள் இட்டு மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
நன்கு மசித்த பின்னர் 1/2 கப் தண்ணீர், மஞ்சத்தூள், சாம்பார் பொடிஅரைத்துவிட்ட குழம்பு தூள்மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து குக்கரை மிதமான தீயில் க்சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை கொதிக்கும் கருணைக்கிழங்கு கலவையில் கொட்டவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி தீயை அதிகப்படுத்தி இரண்டு விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியபின் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி மற்றும் தோசை உடன் தொட்டுக்க வும் நன்றாக இருக்கும்.












மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்த்து ருசிக்க

வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
தக்காளி சட்னி
தக்காளி
சட்னி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி
அவியல்
அவியல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ட்விட்டர்,  G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.