Search This Blog

Monday, April 7, 2014

Poori Potato Gravy

#பூரிஉருளைகிழங்குகறி : பூரி என்றவுடன் நினைவுக்கு வருவது உருளை கிழங்கி கறிதான். இதனை பெரும்பாலும் #பூரிமசாலா என்றே அழைப்பார்கள். பொதுவாக இந்த கறி வேகவைத்த உருளை கிழங்கு மற்றும் வெங்காயம் அதிக அளவில் சேர்த்து வேறு ஏதும் மசாலா பொடிகள் இல்லாமல் செய்யப்படுகிறது.
கடைகளிலும் வீட்டிலும் நன்கு கெட்டியாக செய்யப்படும். ஆனால் என்னுடைய முறைப்படி உருளை கிழங்கின் அளவு சிறிது குறைவாக இருக்கும். மேலும் கறி  சிறிது நீர்க்க இருக்கும். சுவையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் தனிப்பட்ட சுவையுடன் இருக்கும்.
இனி எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் ;
2 அ 3                                        உருளை கிழங்கு வேக வைத்தது.
1 பெரிய அளவு                      வெங்காயம், நீள வாக்கில் மெல்லியதாக அரியவும்
1 அ 2                                        பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
8                                               கருவேப்பிலை
சிறிது                                     கொத்தமல்லி தழை
1 சிறியது                               தக்காளி
2 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/2 Tsp                                       சீரகத் தூள்
1/2 Tsp                                      கடலை மாவு


தாளிக்க :
1/2 Tsp                                     கடுகு
2 Tsp                                       கடலை பருப்பு
2 சிட்டிகை                           பெருங்காய தூள்
2 Tsp                                       எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடித்தபின் கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின் மஞ்சத்தூள் மற்றும் சீரக தூளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கிய பின்னர் தக்காளியை சேர்க்கவும்.


தக்காளியை 1 நிமிடம் வதக்கியவுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


உருளை கிழங்கை கைகளால் பிட்டு போட்டு உப்பு சேர்த்து வெங்காயம் மிருதுவாகும் வரை கொதிக்க விடவும்.

ஒரு கிண்ணத்தில் கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கொதிக்கும் மசாலாவில் சேர்த்து கொதிக்க விடவும்.


சிறிது கெட்டியாக ஆரம்பிக்கும்.
1 அ 2 நிமிடம் கொதித்தால் போதும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி கொண்டு .அலங்கரிக்கவும்.

பூரி மசாலா [ பூரி உருளைகிழங்கு கறி ]


  பூரியுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டு ருசிக்கவும்.


பூரி உருளைகிழங்கு கறி

பூரியுடன் சுவைக்க அருமையான மற்ற கறி வகைகள்

பன்னீர் மசாலா கிரேவி வெண்டைக்காய் தக்காளி கறி காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி

No comments:

Post a Comment