Search This Blog

Saturday, January 17, 2015

Kothamalli-Nellikkai-Thayir-Chutney

#கொத்தமல்லிநெல்லிக்காய்தயிர்சட்னி : குளிர் காலத்தில் பச்சை #கொத்தமல்லி அதிக அளவில் கிடைக்கும். #கொத்தமல்லிதழை  வாசனைக்காக சமையலில் சேர்க்கப் படுகிறது. கொத்தமல்லியில் விட்டமின்களும் தாதுக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் c மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
அதனால் கொத்தமல்லியை நமது அன்றாட சமையலில் அதிக அளவில் எடுத்துக் கொள்வது நலம்.
நெல்லிக்காய் வைட்டமின் c அதிக அளவு நிறைந்துள்ள கனியாகும்.
இவ்விரண்டையும் உபயோகித்து ஒரு சுவையான சட்னி செய்வதெப்படி என காண்போம்.

கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி


தேவையான பொருட்கள் :
1 cupகொத்தமல்லி தழை 
2 or 3நெல்லிக்காய் [ Gooseberry - amla ]
1/3 cupகெட்டி தயிர்
7 to 8பச்சை மிளகாய்
8 to 10சின்ன வெங்காயம்
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு  [ adjust ]
1 to 2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]

செய்முறை :

  • தயிரை கரண்டி அல்லது மத்து கொண்டு கடைந்து வைக்கவும்.
  • நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தப் படுத்தி வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தின் தோலுரித்தது வைக்கவும்.
  • நெல்லிக்காயை இட்லி பானை அல்லது குக்கரில் [ வெயிட் பொருத்தாமல் ] ஆவியில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • வேக வைத்த நெல்லிக்காயின் கொட்டையை அகற்றவும்.
  • தயிர் மற்றும் எலுமிச்சை சாறு நீங்கலாக மிக்ஸியில் அனைத்தையும் அரைக்கவும்.
  • கடைசியாக தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • உப்பு சரி பார்க்கவும்.
  • சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி
இட்லி, தோசை, உப்புமா மற்றும் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் ஏற்ற சட்னி ஆகும்.
செய்து சுவைத்து பாருங்கள்!!




மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி








2 comments:

  1. எளிமையான சுவையான அவசரத்திற்கு ஆகும்
    அருமையான பதார்த்தத்தை படங்களுடன்
    பதிவு செய்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பதிவை படித்து பார்த்துவிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!!
      நான் வசிக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எளிமையாகவும் குறுகிய நேரத்திலும் மற்றும் சத்துக்கள் அழியாமலும் நான் சமைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம் ஆகும். தங்களை போன்றவர்களின் வாழ்த்துக்களும் ஊக்கமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் மேலும் தொடர்ந்து தொய்வில்லாமல் சமையல் குறிப்புகளை எழுத தூண்டுகோலாக இருக்கிறது..
      நன்றி!!
      தங்களுக்கு என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

      Delete