#வாழைப்பூமுருங்கைக்கீரைகூட்டு : இந்த #கூட்டு செய்வதற்கு வாழைப்பூவின் உள் பகுதியில் உள்ள இளைய மற்றும் நடுகாம்பு சிறிது மென்மையாக உள்ள ஆர்குகளை உபயோகப்படுத்தினால் அருமையான
சுவையுடன் இருக்கும்.
உள்பகுதி இளசாக இருப்பதால் நடுவே இருக்கும் தண்டை நீக்கவேண்டிய அவசியம் இல்லை. அதே போல மேலே மூடியிருக்கும் தோலையும் நறுக்கி சேர்க்கலாம். முருங்கைகீரையும் இளங்கீரையாக இருத்தல் அவசியம்.
எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் : வாழைப்பூ அரிந்தது
1/2 கப் : முருங்கைக் கீரை
1 சிறியது : பெரிய வெங்காயம்
1 சிட்டிகை : மஞ்சத்தூள்
3/4 Tsp : சாம்பார் பொடி
3/4 Tsp : உப்பு
2 Tbsp : வேக வைத்த பச்சை பருப்பு
அரைக்க :
3 Tsp : தேங்காய் துருவல்
1/4 Tsp : சீரகம்
1/4 Tsp : அரிசி மாவு
5 அ 6 : மிளகு
தாளிக்க :
1/2 Tsp : வெங்காய வடவம்
1/2 Tsp : எண்ணெய்
அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.
செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
குக்கரில் அரிந்து வைத்துள்ளவற்றையும் மற்ற பொடிகளையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.
அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்.
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கெட்டியாகவோ அல்லது தளரவோ இந்த கூட்டை தயாரித்துக கொள்ளலாம்.
கூட்டு சிறிது நீர்க்க வைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
மேலும் சில வாழைப்பூ கொண்டு செய்யப்படும் உணவு வகைகள்

No comments:
Post a Comment