தக்காளி காய் கூட்டு : தக்காளி பழத்திற்கு ஒரு சுவையும் மணமும் இருப்பது போல தக்காளி காய்க்கும் தனி சுவை உண்டு. தக்காளி காய் கொண்டு கூட்டு மற்றும் சாம்பார் செய்யலாம். இங்கு கூட்டு எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
4 : தக்காளி காய்
1 : தக்காளி
1 சிறியது : பெரிய வெங்காயம்
1 சிட்டிகை : மஞ்சத்தூள்
3/4 Tsp : சாம்பார் பொடி
3/4 Tsp : உப்பு
2 Tbsp : வேக வைத்த பச்சை பருப்பு
அரைக்க :
3 Tsp : தேங்காய் துருவல்
1 அ 2 : பச்சை மிளகாய்
1/2 Tsp : சீரகம்
1/4 Tsp : அரிசி மாவு
5 அ 6 : மிளகு
தாளிக்க :
1/2 Tsp : கடுகு
1 1/2 Tsp : உளுத்தம் பருப்பு
1/2 Tsp : எண்ணெய்
அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.
செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
தக்காளியை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் அரிந்தவை அனைத்தும், பருப்பு, கொடுக்கப்பட்டுள்ள பொடிகள், மற்றும் உப்பு சேர்த்து மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
குக்கரிலிருந்து உடனே ஆவியை வெளியேற்றி திறந்து விடவும்.
அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும்.
நன்றாக கிளறி 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
இந்த கூட்டு ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்

No comments:
Post a Comment