#தூத்பேடா : பால் கோவாவில் மைதாவையும் ஏலக்காயையும் சேர்த்து கிண்டி வட்ட வில்லைகளாக தட்டி செய்யப்படும் இனிப்புவகையின் பெயர் தூத் பேடா. பால்கோவாவை அடுப்பில் மிகுந்த நேரத்திற்கு கிண்டி கொண்டே இருக்க வேண்டும். அதற்கு பதிலாக இங்கு ஒரு உடனடி மைக்ரோவேவ் செய்முறையை பார்ப்போம்.
வலைத்தளத்தில் பவுண்ட் அளவுகோலில் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை நமது அளவிற்கு மாற்றி செய்தேன். அதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் :
1 Tbsp வெண்ணெய்
1/2 கப் Milk Maid
3/4 கப் பால் பவுடர்
சிறிதளவு பாதாம் துருவியது
செய்முறை :
மைக்ரோவேவில் வைக்ககூடிய கண்ணாடி பாத்திரத்தில் வெண்ணெயை 10 second சூடாக்கி இளக்கிக் கொள்ளவும்.
வெளியே எடுத்து milk maid மற்றும் பால் பவுடர் சேர்த்து கட்டிகளின்றி கலக்கவும்.
கலக்கிய கலவை நீர்க்க இருக்கக் கூடாது. இருந்தால் சிறிது பால் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.
கலவையை 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்ய வேண்டும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு வெளியே எடுத்து கிண்டி விட்டு மறுபடியும் மைக்ரோவேவ் செய்யவும்.
ஒரு கட்டத்தில் கலவை நுரைத்து மேல எழும்பும். மேலும் நிறம் சிறிது மாறும்.
அதுதான் சரியான தருணம்.
வெளியே எடுத்து சிறிது ஆற விட்டு கையில் நெய் தடவிக்கொண்டு உருட்டி நடுவே பாதாம் துகளை அழுத்தி வைக்கவும். மிக விரைவாக உருட்ட வேண்டும்.
ஆறி விட்டால் வெடிப்புகளுடன் உருண்டை இருக்கும்.
முதலில் இரண்டரை நிமிடத்தில் வெளியே எடுத்து உருட்டியது சிறிது பால் பவுடரின் பச்சை வாசனையுடன் இருந்தது.
மறுபடியும் ஒரு அரை நிமிடம் வைத்து எடுத்தவுடன் அப்படியே ஆவின் பால்கோவாவின் சுவை வந்தது.
மைக்ரோவேவ் செய்யும் நேரமும் கலவையின் கெட்டித் தன்மையுமே இந்த இனிப்பு நன்றாக அமைய முக்கிமானதாகும். மிக்க கவனமுடன் செய்து சுவைக்கவும்.
மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

|
|
|
|
|
No comments:
Post a Comment