#வாழைப்பூபருப்புஉசிலி : நமது தமிழர் உணவு முறைப்படி அன்றாடம் உட்கொள்ளப்படும் உணவு ஆறு சுவைகளை உடையதாக இருக்க வேண்டும். ஆறு சுவைகள் : இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், மற்றும் துவர்ப்பு ஆகியவையாகும்.
இதில் துவர்ப்பு சுவையுடையது வாழைப்பூ. பெரும்பாலானவர்களுக்கு இந்த துவர்ப்பு சுவை பிடிக்காததால் சமையலில் சேர்த்துக்கொள்வதில்லை. இங்கே கொடுக்கப் போகும் முறையில் வாழைப்பூ கறி செய்து ஒரு முறை சாப்பிட்டு பார்த்து விட்டால் பின்னர் வாழைப்பூவை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
7 அ 8 கொத்து வாழைப்பூ, நடு காம்பை அகற்றவும்.
1 சிட்டிகை மஞ்சத்தூள்
1/4 Tsp உப்பு
மசாலா அரைக்க :
4 Tsp தேங்காய் துருவல்
1 Tsp சீரகம்
1 Tsp சோம்பு
1/2 Tsp மல்லி விதை
1 அ 2 சிகப்பு மிளகாய்
3 பற்கள் பூண்டு
1 நடுத்தர வெங்காயம்
அல்லது
4 சின்ன வெங்காயம்
1/2 Tsp உப்பு
8 கருவேப்பிலை
1 பிடி கொத்தமல்லி தழை
2 Tbsp துவரம் பருப்பு
2 Tbsp கடலை பருப்பு
பருப்பு இரண்டையும் கழுவி ஊற வைக்கவும்.
தாளிக்க :
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
4 அ 5 Tsp எண்ணெய்
செய்முறை :
முதலில் மசாலாவை அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
ஊற வைத்த பருப்பு, வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். தேவையானால் சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து ஒன்றிரண்டு சுற்றுக்களே சுற்றி திப்பி திப்பியாக அரைக்கவும்.
கடைசியாக பருப்பை சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும்.
மசாலாவை வெந்த வாழைப்பூவில் சேர்த்து நீர் சுண்டி பொன்னிறமாகும் வரை கிளற வேண்டும். மசாலாவில் தண்ணீர் அதிகமாக சேர்த்தால் தண்ணீர் சுண்டநீண்ட நேரமாகும்!! அதனால் கவனம் தேவை!!
இருந்தாலும் ஒரு எளிய வழியில் இந்த கறியை குறைவான நேரத்தில் செய்யலாம்.
அடுப்பின் ஒரு பர்னரில் எண்ணெய் ஒட்டாத தோசை கல்லை சூடாக்கவும்.
இன்னொன்றில் வாணலியை சூடாக்கவும்.
தோசை கல்லில் 1 Tsp எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை தோசை போல் பரப்பவும்.
ஒன்றிரண்டு நிமிடம் கழித்து திருப்பி வேக விடவும். திருப்பும் போது உடைந்தால் பரவாயில்லை. இதனை உதிர்த்துதான் வழைப்பூவுடன் சேர்க்கப்போகிறோம்.
அதிக தண்ணீர் சுண்டினால் போதுமானது.
அடுப்பை நிறுத்தி விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
எண்ணையில் மஞ்சத்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய பூவை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து கலக்கி மூடி வேக விடவும்.
ஒன்றிரண்டு நிமிடங்களில் பூ வெந்து விடும்.
வெந்ததும் தோசை கல்லில் வாட்டிய மசாலாவை கைகளால் உதிர்த்து சேர்த்து கலக்கி விடவும்.
தேவையெனில் உப்பு சரி பார்க்கவும்.
மேலும் 2 Tsp எண்ணெய் விட்டு சிறிய தீயில் வைத்திருக்கவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
சிறிது பொன்னிறமானதும் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சாம்பார் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment