Search This Blog

Thursday, March 6, 2014

Mullangi Keerai Stir Fry

#முள்ளங்கிக்கீரைபொரியல் : முள்ளங்கியை காய்கறி மார்கெட்டில் நல்ல பச்சை இலையோடு விற்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் பெரும்பாலானவர்கள் இலையை பியித்து அங்கேயே தூக்கி எரிந்து விட்டு முள்ளங்கியை வாங்கி செல்வதை காணலாம். ஆனால் கீரையும் சமைக்கக் கூடியதே. கீரை மற்றும் தண்டு இரண்டும் சமையலுக்கு உகந்தது. கீரை பொரியல் செய்ய ஏற்றதாகும். இனி எப்படி என பார்க்கலாம்.

முள்ளங்கிக் கீரை பொரியல்


தேவையான பொருட்கள் :
1 கட்டு                                முள்ளங்கி கீரை
1                                            வெங்காயம், பொடியாக அரியவும்.
1 அ 2                                    சிகப்பு மிளகாய்
1 Tsp                                      காரட் பொடியாக அரிந்தது
1/2 tsp                                    கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
2 Tsp                                      தேங்காய் துருவல்
1 Tsp                                     எண்ணெய்

செய்முறை :


கீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடேறியதும் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை உடைத்து சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பின்னர் கீரையையும் காரட் துண்டுகளையும் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி கீரை வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.


கீரை பச்சை நிறம் மாறாமல் வேக வைக்கவும்.
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.
தண்ணீர் சுண்டும் வரை தீயை அதிகப் படுத்தி விடாமல் கிளறி இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியல்.










சில சமையல் வகைகள் சமைக்க ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
அரைக்கீரைமசியல்
அரைக்கீரைமசியல்
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment