Search This Blog

Saturday, March 22, 2014

Varagarisi Thakkali Rice

#வரகரிசிதக்காளிசாதம் : #வரகு சிறு தானிய வகைகளுள் ஒன்று. வரகை அரிசியில் செய்யும் எல்லா உணவு வகைகளையும் செய்யலாம். அந்த வகையில் இன்று தக்காளி வரகரிசி சாதம் எப்படி செய்யலாம் என காணலாம்.

வரகரிசி தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                      வரகரிசி
3 மத்திய அளவு                   தக்காளி , பொடியாக நறுக்கவும்
1 பெரிய அளவு                     வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 பற்கள்                                பூண்டு
1 Tsp                                        இஞ்சி பூண்டு விழுது
1/4 கப்                                     முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது [ விருப்பப்பட்டால் ]
சிறிதளவு                              பச்சை பட்டாணி
6                                               கறுவேப்பிலை
1/4 கப்                                     கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
2 அ 3                                       பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்.


1 Tsp                                         சீரகம்
1 Tsp                                         பெருஞ்சீரகம்
1/2 Tsp                                      மிளகு
1 சிறு துண்டு                         இலவங்கப்பட்டை
3                                                கிராம்பு
2                                                ஏலக்காய்
1அ 2                                         அன்னாசி மொக்கு
3 Tsp                                          நல்லெண்ணெய்

செய்முறை :
வரகரிசியை களைந்து கல் போக அரித்து தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகம், பெருஞ்சீரகம் இரண்டையும் வெடிக்க விட்டபின் மற்ற மசாலா பொருட்களையும் சேர்த்து சில மணி துளிகள் வறுத்தபின் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.

தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.


முட்டைகோஸ் எடுத்திருந்தால் அதனை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இப்போது ஊற வைத்த வரகரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.

1 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கவும். பச்சை பட்டாணியை சேர்க்கவும்.

மூடி போட்டு 3 விசில் வரும் வரை அதிக தீயில் வைக்கவும்.
பிறகு தீயை குறைத்து 3 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.


ஆவி முற்றிலும் அடங்கியபின் திறந்து கிளறி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
தட்டில் எடுத்து கொத்தமல்லி தூவி தயிர் பச்சடி அல்லது குருமாவுடன் சுவைக்கவும்.

வரகரிசி தக்காளி சாதம்





No comments:

Post a Comment